Advertisement

அமராவதி அணையில் இருந்து நாளை முதல் தண்ணீர் திறப்பு: முதல்வர் விஜய் அதிரடி உத்தரவு!

திருப்பூர், கரூர் மாவட்ட மக்களின் குடிநீர்த் தேவைக்காக அமராவதி அணையில் இருந்து நாளை முதல் செப்டம்பர் 7 வரை தண்ணீர் திறக்க முதல்வர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.

திருப்பூர் மற்றும் கரூர் மாவட்ட மக்களின் குடிநீர்த் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில், உடுமலைப்பேட்டை அருகே உள்ள அமராவதி அணையில் இருந்து நாளை முதல் செப்டம்பர் 7-ஆம் தேதி வரை நாளொன்றுக்கு வினாடிக்கு 1,000 கனஅடி வீதம் தண்ணீர் திறந்துவிட முதலமைச்சர் விஜய் அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.

Advertisement

திருப்பூர், கரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் நிலவி வரும் குடிநீர்த் தட்டுப்பாட்டைப் போக்கவும், அமராவதி ஆற்றுப் படுகையில் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு கூட்டுக் குடிநீர்த் திட்டங்களுக்கான நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தவும் அணையில் இருந்து உடனடியாகத் தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்களும் விவசாயிகளும் அரசுக்குக் கோரிக்கை விடுத்து வந்தனர்.

இக்கோரிக்கையைத் தீவிரமாகப் பரிசீலித்த முதலமைச்சர், பொதுமக்களின் அத்தியாவசியத் தேவையை உணர்ந்து உடனடியாக நீர் திறக்க உத்தரவிட்டார். இதன்படி, அமராவதி அணையின் ஆற்று மதகுகள் வழியாக ஆகஸ்ட் 30-ஆம் தேதி முதல் செப்டம்பர் 7-ஆம் தேதி வரை தொடர்ந்து 8 நாட்களுக்கு நாளொன்றுக்கு 1,000 கனஅடி வீதம் தண்ணீர் திறந்துவிடப்பட உள்ளது.

Advertisement

மேலும், நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் மழைப்பொழிவு ஏற்பட்டு அணைக்கு வரும் நீர்வரத்து அதிகரிக்கும் பட்சத்தில், அணையின் நீர் இருப்பு மற்றும் வரத்தைக் கருத்தில் கொண்டு கூடுதல் நாட்களுக்குத் தண்ணீர் திறக்கவும் முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். அரசின் இந்த அதிரடி அறிவிப்பு கொங்கு மண்டல மக்களிடையே பெரும் நிம்மதியையும் மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

 

 

 

 

What is your reaction?

இதே போன்ற செய்திகள்

Advertisement