Advertisement

சிவகாசி பட்டாசு ஆலைகளின் உரிமம் ரத்து விவகாரம்: மத்திய, மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்!

சிவகாசி பட்டாசு ஆலைகளின் உரிமம் ரத்து செய்யப்பட்டதை எதிர்த்த வழக்கில் மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

சிவகாசி பகுதியில் விதிமீறல் உள்ளிட்ட காரணங்களைக் காட்டி பட்டாசு உற்பத்தி ஆலைகளின் உரிமங்கள் ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், மத்திய மற்றும் தமிழக அரசுகள் பதிலளிக்கக் கோரி Supreme Court of India உத்தரவிட்டுள்ளது.

Advertisement

விருதுநகர் மாவட்டம் சிவகாசி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் செயல்பட்டு வரும் பட்டாசு உற்பத்தி ஆலைகளில் சமீபத்தில் மாவட்ட நிர்வாகம் மற்றும் வெடிபொருள் கட்டுப்பாட்டுத் துறை அதிகாரிகள் தொடர் ஆய்வுகளை மேற்கொண்டனர். அப்போது பாதுகாப்பு விதிகள் மற்றும் வழிகாட்டு நெறிமுறைகள் முறையாகப் பின்பற்றப்படவில்லை எனக் கூறி நூற்றுக்கும் மேற்பட்ட ஆலைகளின் உரிமங்கள் தற்காலிகமாகவும் நிரந்தரமாகவும் ரத்து செய்யப்பட்டன.இதனை எதிர்த்து சிவகாசி பட்டாசு உற்பத்தியாளர்கள் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

அந்த மனுவில், “தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் வேளையில் ஆலைகளின் உரிமங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதால் லட்சக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்வாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது; மேலும் உற்பத்தி முடங்கி பெரும் பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளது” என வாதிடப்பட்டது.இந்த மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட உச்சநீதிமன்ற நீதிபதிகள் அமர்வு, மனுதாரர்களின் கோரிக்கை குறித்து விரிவான விளக்கம் அளிக்குமாறு மத்திய அரசுக்கும் மற்றும் தமிழ்நாடு அரசுக்கும் நோட்டீஸ் பிறப்பித்தது. மேலும், வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை வரும் செப்டம்பர் 2-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

Advertisement

 

 

 

What is your reaction?

இதே போன்ற செய்திகள்

Advertisement