Advertisement
,

புஷ்பா 2 கூட்ட நெரிசல் மரண வழக்கு: அல்லு அர்ஜுனுக்கு நீதிமன்ற சம்மன்!

புஷ்பா 2 திரைப்படத்தின் சிறப்புக் காட்சி நிகழ்ச்சியின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பான வழக்கில் நடிகர் அல்லு அர்ஜுனுக்கு நாம்பள்ளி நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது.

கடந்த 2024ஆம் ஆண்டு ஹைதராபாத்தில் உள்ள ஒரு திரையரங்கில் புஷ்பா 2 திரைப்படத்தின் சிறப்புக் காட்சி நடைபெற்றது. அப்போது நடிகர் அல்லு அர்ஜுனை காண ஆயிரக்கணக்கான ரசிகர்கள் திரண்டிருந்தனர். இதனால் ஏற்பட்ட கடும் கூட்ட நெரிசலில் ரேவதி என்ற பெண் சிக்கி உயிரிழந்தார். மேலும் அவரது மகன் பலத்த காயமடைந்து நீண்டகாலமாக சிகிச்சை பெற்று வருகிறார்.

Advertisement

இந்த சம்பவம் தெலுங்கு திரையுலகிலும் அரசியல் வட்டாரங்களிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சம்பவம் தொடர்பாக காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறது. கூட்ட நிர்வாகத்தில் ஏற்பட்ட குறைபாடுகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், வழக்கின் அடுத்த கட்ட விசாரணைக்காக நடிகர் அல்லு அர்ஜுன் நேரில் ஆஜராக வேண்டும் என ஹைதராபாத் நாம்பள்ளி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி வரும் ஜூன் 23ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

Advertisement

இந்த வழக்கின் விசாரணை தெலுங்கு திரையுலகில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ள நிலையில், நீதிமன்றத்தில் அல்லு அர்ஜுன் ஆஜராகும் நாளை ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர்.

What is your reaction?

இதே போன்ற செய்திகள்

Advertisement