Advertisement

போராட்டத்தில் இறங்கிய காங்கிரஸ் – மத்திய அரசுக்கு எதிராக தெறித்த முழக்கம்!

செங்கல்பட்டு பழைய பேருந்து நிலையம் அருகே, மத்திய அரசுக்கு எதிராக காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

எதிர்க்கட்சிகளை ஒடுக்கும் நோக்கில் சிபிஐ இயக்குநர் பிரவீன் சூட்டின் பதவிக்காலம் மேலும் ஓராண்டு நீட்டிக்கப்பட்டதை கண்டித்தும், நீட் தேர்வை ரத்து செய்து மாநில அரசே தேர்வு நடத்த அனுமதி வழங்க மறுக்கும் மத்திய பாஜக அரசை கண்டித்தும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Advertisement

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் செங்கல்பட்டு தெற்கு மாவட்டம் சார்பில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு செங்கல்பட்டு நகர தலைவர் பாலவிக்னேஷ் தலைமை தாங்கினார். இதில் மாவட்ட தலைவர் ஜே.பி. பிரபு சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். ஆர்ப்பாட்டத்தின் போது, மத்திய அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பிய காங்கிரஸ் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள், நீட் தேர்வு முறைக்கு எதிர்ப்பு தெரிவித்து முழக்கமிட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் 100-க்கும் மேற்பட்ட காங்கிரஸ் கட்சியினர் கலந்து கொண்டு தங்களது எதிர்ப்பை பதிவு செய்தனர்.

What is your reaction?

இதே போன்ற செய்திகள்

Advertisement