Advertisement

செய்யூரில் நல்லூர் நத்தத்தனார் நினைவு நாள் நிகழ்ச்சி

செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் அருகிலுள்ள நல்லுலூர் கிராமத்தில் சங்ககாலப் புலவர் நல்லூர் நத்தத்தனார் அவர்களின் நினைவை போற்றும் நிகழ்ச்சி இன்று நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சி தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

நல்லுலூர் கிராமத்தைச் சேர்ந்த நத்தத்தனார், சங்க இலக்கியங்களில் முக்கியமான ஒன்றான பத்துப்பாட்டின் கீழ் வரும் சிறுபாணாற்றுப்படை நூலை இயற்றிய சிறந்த புலவராக விளங்கியவர். அவரின் தமிழ் இலக்கிய பங்களிப்பை நினைவுகூரும் வகையில், 1992ஆம் ஆண்டு தமிழக அரசு நல்லுலூரில் கிழக்கு கடற்கரை சாலை அருகே நினைவுத் தூண் ஒன்றை நிறுவியது.

Advertisement

இதன் தொடர்ச்சியாக, ஒவ்வொரு ஆண்டும் கவிஞர் பாரதிதாசன் பிறந்த நாளான ஏப்ரல் 29 அன்று, தமிழ் கவிஞர் நாள் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி, இன்று காலை 9.00 மணிக்கு நல்லுலூர் நத்தத்தனார் நினைவுத் தூண் அருகே சிறப்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

இந்த நிகழ்வில் உள்ளூர் மக்கள், தமிழ் ஆர்வலர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டு புலவரின் பங்களிப்பை நினைவுகூர உள்ளனர்.

What is your reaction?

இதே போன்ற செய்திகள்

Advertisement