Advertisement

செங்கல்பட்டு: காணாமல் போன குழந்தைகளை மீட்க சட்ட தன்னார்வ தொண்டர்கள் தேர்வு

செங்கல்பட்டு மாவட்டத்தில் காணாமல் போன குழந்தைகளை மீட்டெடுக்கும் பணிக்காக காவல் நிலையங்களில் சட்ட தன்னார்வ தொண்டர்களை தேர்வு செய்ய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்த தகவலை செங்கல்பட்டு மாவட்ட முதன்மை நீதிபதி T. சந்திரசேகரன் வெளியிட்டுள்ளார்.

தேசிய மற்றும் மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் வழிகாட்டுதலின்படி, மாவட்ட மற்றும் வட்ட சட்டப்பணிகள் குழுக்கள் இணைந்து இந்தத் தேர்வை நடத்துகின்றன. ஆலந்தூர், தாம்பரம், மதுராந்தகம், திருக்கழுக்குன்றம், பல்லாவரம், செய்யூர், திருப்போரூர் உள்ளிட்ட பகுதிகளில் மொத்தம் 30 முதல் 40 பேர்வரை தன்னார்வ தொண்டர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

Advertisement

இந்த பணிக்கு ஆசிரியர்கள், ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள், சமூக ஆர்வலர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், மருத்துவர்கள், சட்ட கல்லூரி மாணவர்கள், மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட பல்வேறு துறையைச் சேர்ந்தவர்கள் விண்ணப்பிக்கலாம். அடிப்படை கல்வி மற்றும் கணினி அறிவு உள்ளவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

விருப்பமுள்ளவர்கள் Chengalpattu District Court Portal இணையதளத்தில் இருந்து விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, தேவையான ஆவணங்களுடன் மே 22க்குள் அனுப்ப வேண்டும். தேர்வு நேர்காணல் மூலம் நடைபெறும். தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு மதிப்பூதியம் வழங்கப்படும்.


What is your reaction?

இதே போன்ற செய்திகள்

Advertisement