Advertisement

“பாரதிராஜா – பாக்யராஜூக்கு மணிமண்டபம், சிலை” – தமிழ் திரையுலகம் சார்பில் ஆகஸ்ட் 16-ல் நினைவு உற்சவம்!

தமிழ் திரைப்படத்துறையின் இரு பெரும் ஆளுமைகளான மறைந்த இயக்குனர்கள் பாரதிராஜா மற்றும் கே.பாக்யராஜ் ஆகியோரின் சாதனைகளைப் போற்றும் வகையில், வரும் ஆகஸ்ட் 16-ஆம் தேதி சென்னையில் ‘ராஜகோபுரங்களின் நினைவு உற்சவம்’ என்ற பிரம்மாண்ட விழாவை நடத்தத் தமிழ் திரையுலகின் அனைத்துச் சங்கங்களும் ஒன்றிணைந்துத் திட்டமிட்டுள்ளன.

தமிழ் சினிமாவின் போக்கையே மாற்றி அமைத்த ‘இயக்குனர் இமயம்’ பாரதிராஜா மற்றும் திரைக்கதை மன்னன் கே.பாக்யராஜ் ஆகியோரின் திரையுலகப் பங்களிப்பை கௌரவிக்கும் வகையில் இம்மாபெரும் கலை விழா சென்னை கலைவாணர் அரங்கத்தில் காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரை தொடர்ந்து 12 மணி நேரம் நடைபெறவுள்ளது.

Advertisement

தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம், தென்னிந்திய நடிகர் சங்கம், இயக்குனர்கள் சங்கம் மற்றும் திரைப்படத் தொழிலாளர்கள் சம்மேளனம் (FEFSI) ஆகியவை இணைந்து இந்த பிரம்மாண்ட நிகழ்வை ஒருங்கிணைக்கின்றன. இவ்விழாவில் திரையுலக நட்சத்திரங்களான ரஜினிகாந்த், கமல்ஹாசன், மோகன்லால் உள்ளிட்ட பல இந்தியத் திரைப் பிரபலங்கள் நேரில் பங்கேற்கின்றனர்.

மேலும், தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் உள்ளிட்ட முக்கிய அரசியல் தலைவர்களுக்கும் சிறப்பு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இவ்விழாவின் மூலம் திரட்டப்படும் நிதி மற்றும் வருவாயைக் கொண்டு, இயக்குனர் பாரதிராஜாவுக்கு அவரது சொந்த ஊரான தேனியிலும், இயக்குனர் பாக்யராஜூக்கு அவரது சொந்த ஊரான கோபிசெட்டிபாளையத்திலும் பிரம்மாண்ட மணிமண்டபங்கள் கட்டப்பட்டு, அங்கு அவர்களின் மார்பளவு வெண்கலச் சிலைகள் நிறுவப்படவுள்ளன. தென்னிந்திய நடிகர் சங்கத் தலைவர் நாசர், இயக்குனர்கள் கே.எஸ்.ரவிகுமார், லிங்குசாமி உள்ளிட்ட நிர்வாகிகள் இதற்கானத் திட்டமிடல்களை வெளியிட்டுள்ளது சினிமா வட்டாரத்திலும் ரசிகர்களிடையேயும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

 

 

What is your reaction?

இதே போன்ற செய்திகள்

Advertisement