Advertisement

“நான் உயிரோடு இருக்கும் வரை ‘நாம் நால்வரும்’ ஒன்றாக மாட்டோம்” – நடிகர் ரவிமோகன்

நண்பர்கள் தினத்தை முன்னிட்டுத் தனது சமூக வலைத்தளத்தில் உருக்கமான மற்றும் அதிரடியானப் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ள பிரபல திரைப்பட நடிகர் ரவிமோகன் (ஜெயம் ரவி), “நான் உயிரோடு இருக்கும் வரை நாங்கள் நால்வரும் மீண்டும் ஒரே அறையில் ஒன்றாகவே இருக்க மாட்டோம்; உங்கள் நண்பர்களைக் கவனமாகத் தேர்ந்தெடுங்கள்” எனத் தெரிவித்து திரையுலகிலும் ரசிகர்கள் மத்தியிலும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளார்.

சமீபகாலமாகத் தனது குடும்ப வாழ்க்கை மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையில் பல்வேறு சிக்கல்களைச் சந்தித்து வரும் நடிகர் ரவிமோகன், நண்பர்கள் தினத்தை முன்னிட்டுத் தனது உண்மையான நண்பர்களுக்கு நன்றி தெரிவித்துப் பதிவு ஒன்றைப் பகிர்ந்துள்ளார். அந்தப் பதிவில், “எனக்கு உண்மையான நண்பர்களாகவும், எனது கடினமான காலகட்டங்களில் உறுதியான பக்கபலமாகவும் நிற்பதற்கு உங்கள் அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள். ஆனால், அதே வேளையில் சிலர் நீதிமன்ற அவமதிப்புக்கு இணையான தவறான வழிகளில் செயல்படுவது மிகவும் துரதிர்ஷ்டவசமானது” எனத் தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.

Advertisement

தொடர்ந்து பேசிய அவர், “நான் உயிரோடு இருக்கும் வரை நாங்கள் நால்வரும் மீண்டும் ஒரே அறையில் ஒன்றாக இணையவே மாட்டோம். எப்போதும் மகிழ்ச்சியாக இருங்கள், உங்கள் நண்பர்களை மிகவும் கவனமாகத் தேர்ந்தெடுங்கள்” என்று குறிப்பிட்டிருந்தார்.

சமீபத்தில் ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில், தனது இரு மகன்களையும் தன்னைச் சந்திக்க விடாமல் மனைவி தடுப்பதாகக் குற்றம்சாட்டி கண்ணீர் மல்கப் பேசியிருந்தார் ரவிமோகன். இந்நிலையில், அவர் குறிப்பிட்டுள்ள ‘நால்வர்’ என்பது தானும், தனது மனைவியும் மற்றும் தனது இரு மகன்களுமே என்பதையும், அவர்கள் மீண்டும் ஒன்றாக இணைய வாய்ப்பே இல்லை என்பதையும் தான் இந்த நண்பர்கள் தினப் பதிவின் மூலம் அவர் மறைமுகமாகத் திட்டவட்டமாக உணர்த்தியுள்ளார் எனச் சினிமா வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது.

Advertisement

 

 

 

What is your reaction?

இதே போன்ற செய்திகள்

Advertisement