Advertisement

இந்திய அரசியலில் புதிய வரலாறு: 4399 நாட்கள் தொடர்ந்து பிரதமர் பதவி; நேருவின் சாதனையை முறியடித்தார் மோடி!

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட இந்தியப் பிரதமர்களில் தொடர்ந்து 4,399 நாட்கள் பதவி வகித்ததன் மூலம், ஜவஹர்லால் நேருவின் சாதனையைப் பிரதமர் நரேந்திர மோடி முறியடித்துள்ளார். இதற்கு என்டிஏ கூட்டணிக் கட்சித் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

இந்திய ஜனநாயக வரலாற்றில் புதிய சாதனையாக, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமர்களில் தொடர்ந்து 4,399 நாட்கள் பதவி வகித்ததன் மூலம், ஜவஹர்லால் நேருவின் நீண்ட காலத் தொடர் சாதனையைப் பிரதமர் நரேந்திர மோடி முறியடித்துள்ளார். 1952-ஆம் ஆண்டு இந்தியாவின் முதல் பொதுத்தேர்தலுக்குப் பிறகு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமராக நேரு தொடர்ந்து 4,398 நாட்கள் பதவி வகித்ததே இதுவரை சாதனையாக இருந்தது.

Advertisement

மத்தியில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA) ஆட்சிப் பொறுப்பேற்று நேற்றுடன் 12 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள சூழலில், பிரதமர் மோடி இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க மைல்கல்லை எட்டியுள்ளார். இதனை முன்னிட்டு நேற்று புதுடெல்லியில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், பிரதமர் மோடியின் இந்தத் தொடர் சாதனையைப் பாராட்டித் தார்மீகத் தீர்மானம் ஒன்று ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. அத்துடன், இந்த உன்னதமான சாதனையானது இந்திய மக்கள் அவர் மீது வைத்துள்ள அளப்பரிய நம்பிக்கையைப் பிரதிபலிக்கிறது என்று மத்திய அமைச்சர்கள் புகழாரம் சூட்டியுள்ளனர்.

தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் பல்வேறு கூட்டணிக் கட்சித் தலைவர்களும், மாநில முதலமைச்சர்களும் பிரதமர் மோடியை நேரில் சந்தித்து மலர்க்கொத்துகள் மற்றும் பொன்னாடைகள் வழங்கித் தங்களது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். “வளர்ச்சியடைந்த இந்தியா @2047” என்ற தொலைநோக்குப் பார்வையின் கீழ், நாட்டின் சமூக, பொருளாதார மற்றும் உள்கட்டமைப்பு வளர்ச்சியை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லப் பிரதமர் மோடியின் இந்தத் தொடர் ஆளுமை பெரும் துணையாக இருக்கும் என்று என்டிஏ கூட்டணிக் தலைவர்கள் தங்களது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளனர்.

Advertisement

 

 

 

 

What is your reaction?

இதே போன்ற செய்திகள்

Advertisement