Advertisement

“கண்ணீர் விட்டு பொய் சொல்கிறார்” – மலையாள நடிகையின் குற்றச்சாட்டுக்கு ‘எருமை சாணி’ விஜய் பதிலடி!

‘எருமை சாணி’ யூடியூப் சேனல் மூலம் புகழ்பெற்ற விஜய்குமார் மீது, மலையாள நடிகை அனுகிரஹா முன்வைத்த அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள் சமூக வலைதளங்களில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளன. தற்போது ஹாட்ஸ்டார் தளத்திற்காக ‘ரெசார்ட்’ (Resort) என்ற வெப் தொடரை இயக்கி வரும் விஜய், நடிகையின் புகார்களைத் திட்டவட்டமாக மறுத்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

சமீபத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்ட நடிகை அனுகிரஹா, ‘ரெசார்ட்’ தொடருக்காகத் தன்னுடன் ஓராண்டு ஒப்பந்தம் செய்துவிட்டு, முறையாகப் படப்பிடிப்பு நடத்தாமலும், பேசிய சம்பளத்தைத் தராமலும் படக்குழு ஏமாற்றியதாகக் கண்ணீருடன் தெரிவித்தார். மேலும், படப்பிடிப்புத் தளத்தில் தரம் குறைந்த உணவு வழங்கப்பட்டதாகவும், உடல்நலம் பாதிக்கப்பட்டபோது விஜய்யின் மனைவி தன்னை மிகவும் இழிவாகப் பேசியதாகவும் அவர் குற்றம் சாட்டியிருந்தார். இளம் கலைஞர்களை மிரட்டும் இந்தத் தயாரிப்பு நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார்.

Advertisement

நடிகையின் இந்த வீடியோ வைரலானதைத் தொடர்ந்து, விஜய் மற்றும் அவரது மனைவி ஆகியோர் இதற்குப் பதிலடி கொடுத்துள்ளனர். விஜய் வெளியிட்ட வீடியோவில் கூறியிருப்பதாவது, அந்தப் பெண் நடித்த நாட்கள் வரை அவருக்குச் சரியாகச் சம்பளம் வழங்கப்பட்டுள்ளது. இது தவிர, கஷ்டமாக இருக்கிறது என்று அவர் கேட்டதற்காக 25 ஆயிரம் ரூபாய் முன்பணமும் வழங்கப்பட்டது. இதனை அவர் மறுக்க முடியுமா?”

தற்போது அவர் வேறொரு படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அதனால், இந்த வெப் தொடரில் தனது கதாபாத்திரம் முக்கியத்துவம் இல்லாமல் இருந்தால் தனது இமேஜ் பாதிக்கப்படும் எனக் கருதி, ரோலை மாற்றச் சொல்கிறார். ஒப்பந்தம் செய்தபோது என்ன சொன்னோமோ அதைத்தான் எடுக்க முடியும்.”

Advertisement

அவருக்குப் பெரிய பட வாய்ப்பு வந்தபோது, நாங்கள் மகிழ்ச்சியோடுதான் அனுப்பி வைத்தோம். அவர் நடித்த ஒரே ஒரு காட்சிக்குக் கூட பணம் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் இப்போது எங்களை வஞ்சிப்பதாகக் கண்ணீர் விட்டு நாடகமாடுகிறார்.

இளம் கலைஞர்களுக்கும் தயாரிப்பு நிறுவனங்களுக்கும் இடையிலான இந்த மோதல் கோலிவுட் வட்டாரத்தில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் புகாரை அடுத்து, தென்னிந்திய நடிகர் சங்கம் அல்லது தயாரிப்பாளர் சங்கம் தலையிடுமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

What is your reaction?

இதே போன்ற செய்திகள்

Advertisement