உலக மிதிவண்டி தினம்: திருவடிசூலத்தில் மாவட்ட அளவிலான சைக்கிள் போட்டி

0
4

உலக மிதிவண்டி தினத்தை முன்னிட்டு செங்கல்பட்டு மாவட்டம் திருவடிசூலத்தில் மாவட்ட அளவிலான மிதிவண்டி போட்டிகள் உற்சாகமாக நடைபெற்றன. இந்திய விளையாட்டுத் துறை மற்றும் செங்கல்பட்டு மாவட்ட மிதிவண்டி சங்கம் இணைந்து இந்த போட்டிகளை ஏற்பாடு செய்திருந்தன.

மூன்று பிரிவுகளாக நடத்தப்பட்ட இந்த போட்டிகளில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த மிதிவண்டி வீரர்கள் ஆர்வமுடன் பங்கேற்றனர். போட்டிகளை செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் டாக்டர் மு. வீரப்பன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் பேசிய அதிகாரிகள், உடல்நலத்தை பேணுவதிலும், சுற்றுச்சூழலை பாதுகாப்பதிலும் மிதிவண்டி பயன்பாடு முக்கிய பங்கு வகிப்பதாக தெரிவித்தனர். இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் அதிகளவில் மிதிவண்டி பயன்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.

போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டதுடன், விளையாட்டு திறன்களை ஊக்குவிக்கும் வகையில் பரிசுகளும் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் மாவட்ட விளையாட்டு துறை அதிகாரி ஆனந்த், செங்கல்பட்டு மாவட்ட மிதிவண்டி சங்க செயலாளர் அமர்நாத் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

உலக மிதிவண்டி தினத்தை முன்னிட்டு நடைபெற்ற இந்த நிகழ்வு, விளையாட்டு ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது.