Advertisement

பெரம்பூர் தொகுதி தேர்தல் வெற்றி: முதல்வர் விஜய்க்கு எதிராக சென்னை ஐகோர்ட்டில் 3 வழக்குகள் தாக்கல்!

பெரம்பூர் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற தமிழக முதல்வர் சி. ஜோசப் விஜய்யின் வெற்றியை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் (ஐகோர்ட்) திமுக வேட்பாளர் ஆர்.டி.சேகர் மற்றும் வாக்காளர்கள் தரப்பில் 3 தேர்தல் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

நடந்து முடிந்த தமிழக சட்டமன்றத் தேர்தலில், தமிழ்நாட்டின் முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள தவெக தலைவர் சி. ஜோசப் விஜய் சென்னை பெரம்பூர் தொகுதியில் போட்டியிட்டுப் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இந்த நிலையில், பெரம்பூர் தொகுதியில் அவரது வெற்றியைச் செல்லாது என அறிவிக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடுக்கப்பட்டுள்ளன. பெரம்பூர் தொகுதியில் விஜய்யை எதிர்த்துப் போட்டியிட்ட திமுக வேட்பாளர் ஆர்.டி.சேகர் ஒரு தேர்தல் வழக்கைத் தாக்கல் செய்துள்ளார்.

Advertisement

அவரைத் தொடர்ந்து, அதே தொகுதியைச் சேர்ந்த வாக்காளர்களான தினேஷ் மற்றும் லட்சுமி நரசிம்மன் ஆகிய இருவரும் தங்களின் பங்கிற்குத் தனித்தனியாக இரண்டு தேர்தல் வழக்குகளைச் சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ளனர். இந்த மனுக்களில், “தேர்தல் வேட்புமனுத் தாக்கலின் போது சொத்து விபரங்கள் மற்றும் குற்ற வழக்குகள் தொடர்பான விபரங்கள் முறையாகக் குறிப்பிடப்படவில்லை” என்றும், “தேர்தல் விதிமுறைகள் மற்றும் நடைமுறைகள் மீறப்பட்டுள்ளதால் பெரம்பூர் தொகுதியின் தேர்தல் வெற்றியைச் செல்லாது என அறிவிக்க வேண்டும்” என்றும் மனுதாரர்கள் தரப்பில் கோரப்பட்டுள்ளது. தமிழக முதல்வர் விஜய்க்கு எதிராக அடுத்தடுத்து 3 தேர்தல் வழக்குகள் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்தச் சம்பவம், கோட்டை வட்டாரத்திலும் தமிழக அரசியல் தளத்திலும் தற்பொழுது பெரும் பரபரப்பையும் விறுவிறுப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

 

Advertisement

 

 

What is your reaction?

இதே போன்ற செய்திகள்

Advertisement