Advertisement

செங்கல்பட்டு: நியாய விலை கடைகளில் eKYC முகாம்

செங்கல்பட்டு மாவட்டத்தில் அனைத்து நியாய விலை கடைகளிலும் வரும் 29.08.2026 அன்று குடும்ப அட்டைதாரர்களுக்கான eKYC சிறப்பு முகாம் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுகிறது.

📢 eKYC பதிவு – 29ம் தேதி சிறப்பு முகாம்!

Advertisement

தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம், 2013-ன்படி முன்னுரிமை மற்றும் அந்தியோதயா அன்ன யோஜனா குடும்ப அட்டைதாரர்களின் ஆதார் விவரங்களை சரிபார்ப்பதற்காக, குடும்ப அட்டையில் இணைக்கப்பட்டுள்ள அனைத்து உறுப்பினர்களின் விரல் ரேகை அடிப்படையிலான eKYC மேற்கொள்ள வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. இதன்படி, செங்கல்பட்டு மாவட்டத்தில் இதுவரை 95.03 சதவீதம் பயனாளிகளுக்கு eKYC பணி நிறைவடைந்துள்ளது.

🏪 அனைத்து நியாய விலை கடைகளிலும் முகாம்!

Advertisement

மீதமுள்ள குடும்ப அட்டைதாரர்களும் eKYC பதிவை 100 சதவீதம் நிறைவு செய்யும் பொருட்டு, 29.08.2026 அன்று செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள அனைத்து நியாய விலை கடைகளிலும் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. இந்த முகாம் காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை நடைபெறும். பொதுமக்கள் தங்களது குடும்ப அட்டையுடன் நியாய விலை கடைக்கு சென்று eKYC பதிவை மேற்கொள்ளலாம்.

👨‍👩‍👧‍👦 குடும்ப அட்டைதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு!

ஆதார் விவரங்களுடன் eKYC பதிவு செய்யப்படாமல் விடுபட்டுள்ள குடும்ப அட்டைதாரர்கள், 29.08.2026 அன்று தங்களது செங்கல்பட்டு மாவட்ட குடும்ப அட்டை உறுப்பினர்கள் அனைவரும் உள்ள அருகிலுள்ள நியாய விலை கடைக்குச் சென்று eKYC பதிவை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர். விடுபட்டுள்ள அனைத்து உறுப்பினர்களின் eKYC பதிவையும் இந்த சிறப்பு முகாமை பயன்படுத்தி நிறைவு செய்யுமாறு மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

What is your reaction?

இதே போன்ற செய்திகள்

Advertisement