Advertisement

வாட்ஸ்அப்பில் புதிய டெவலப்மென்ட்… பயனர்கள் மகிழ்ச்சி… விரைவில்…

உலகெங்கும் உள்ள கோடானா கோடி செல்போன் பயனாளர்களை மகிழ்விக்கும் வகையில் வாட்ஸ்அப்பில் புதிய அப்டேட்டை டெவலப் செய்து வருகிறது மெட்டா நிறுவனம்.

அதாவது WhatsApp பயனர்களுக்காக புதிய மற்றும் சுவாரஸ்யமான அம்சத்தை அறிமுகப்படுத்த தயாராகி வருகிறது. இதுவரை மொபைல் போன்களில் மட்டுமே கிடைத்து வந்த சேட் தீம்கள், இனி லேப்டாப்பிலும் மாற்றிக் கொள்ளும் வசதி வரவுள்ளது. இந்த புதிய அப்டேட் மூலம், பயனர்கள் தங்கள் அரட்டைகளின் தோற்றத்தை நேரடியாக பிரவுசர் மூலமாகவே பல்வேறு வண்ணங்களில் கஸ்டமைஸ் செய்து கொள்ள முடியும் என கூறுகிறது மேட்டா.

Advertisement

WABetaInfo வெளியிட்ட தகவலின்படி, இந்த அம்சம் மூலம் default chat theme-ஐ முழுமையாக மாற்றலாம். வால்பேப்பர் மட்டும் அல்லாமல், மெசேஜ் குமிழ்களின் நிறம், பின்னணி வடிவம் போன்றவற்றையும் விருப்பப்படி மாற்ற முடியும். இதனால், பயனாளர்களின் அரட்டைகள் மேலும் அழகாகவும் தனித்துவமாகவும் தோன்றும் என்பதில் ஐயமில்லை.

இந்த அம்சத்தின் முக்கிய சிறப்பு, ஒவ்வொரு சேட்டுக்கும் தனித்தனி தீம்களை அமைக்க முடிவதாகும். அதாவது, தனிப்பட்ட, அலுவலகம் அல்லது குழு அரட்டைகள் அனைத்திற்கும் வேறு வேறு தோற்றங்களை வழங்கலாம். தற்போது நிறுவனம் சுமார் 49 விதமான தீம்களில் பணியாற்றி வருகிறது. இதில் பல நிறங்களின் வெவ்வேறு சாயல்கள், குறிப்பாக நீல நிறத்தின் பல வடிவங்கள் அடங்கும்.

Advertisement

மேலும், இந்த மாற்றங்கள் முழுமையாக பயனர் தனிப்பட்ட அனுபவத்திற்கே உரியது. நீங்கள் மாற்றும் தீம்கள் உங்களுக்கே மட்டும் தெரியும்; மற்ற பயனர்கள் வழக்கமான தோற்றத்தையே காண்பார்கள்.

தற்போது இந்த அம்சம் டெவலப்மென்ட் நிலையில் உள்ளது. முதலில் பீட்டா பயனர்களிடம் சோதனைக்காக வெளியிடப்பட்டு, பின்னர் அனைவருக்கும் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

What is your reaction?

இதே போன்ற செய்திகள்

Advertisement