மதுராந்தகம் தங்க மோதிரம் வழங்கும் நிகழ்ச்சியில், அரசு மருத்துவமனையில் பிறந்த 13 குழந்தைகளுக்கு சட்டமன்ற உறுப்பினர் மரகதம் குமரவேல் தங்க மோதிரங்களை அணிவித்தார்.
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அரசு மருத்துவமனையில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் தாய்மாமன் தங்க மோதிரம் வழங்கும் திட்டத்தின் கீழ் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மருத்துவமனையில் பிறந்த 13 குழந்தைகளுக்குத் தங்க மோதிரங்கள் வழங்கப்பட்டன.
மதுராந்தகம் சட்டமன்ற உறுப்பினர் மரகதம் குமரவேல் குழந்தைகளுக்குத் தங்க மோதிரங்களை அணிவித்து வாழ்த்தினார்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட இணை இயக்குநர் மலர்விழி, தலைமை மருத்துவ அலுவலர் ஜெயப்பிரியா, மருத்துவ மேற்பார்வையாளர் டாக்டர் ஸ்ரீராம் ஆகியோர் கலந்து கொண்டனர்.
மேலும், தமிழக வெற்றிக் கழக நகரத் தலைவர் பெருமாள், நகர மன்ற உறுப்பினர் ஜெர்லின் ஜோஸ் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் மற்றும் அரசு அலுவலர்கள் பங்கேற்றனர். இதில் கதிர்வேல், முத்து, வழக்கறிஞர் வெற்றிச்செல்வன், கார்த்திக், பாலாஜி, லோகு, ராகுல், மதன், குமார், குமரன், ப.ரே. உமாசங்கர், எத்திராஜ், நித்தியானந்தம், தேவேந்திரன், தங்கப்பன், மகேஷ், முருகம்மாள், கவிதா, கன்னியப்பன், சண்முகம், பிரேம், அஜித்குமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
#மதுராந்தகம்தங்கமோதிரம் #மதுராந்தகம் #தாய்மாமன்தங்கமோதிரத்திட்டம் #மரகதம்குமரவேல் #13குழந்தைகள் #மதுராந்தகம்அரசுமருத்துவமனை #மருத்துவம்மக்கள்நல்வாழ்வுத்துறை #தங்கமோதிரம் #பச்சிளம்குழந்தைகள் #தமிழகவெற்றிக்கழகம் #செங்கல்பட்டு #Madurantakam #GoldRingScheme #ThaimamanGoldRingScheme #MaragathamKumaravel #13Babies #MadurantakamGovernmentHospital #GoldRings #NewbornBabies #HealthDepartment #TamilagaVettriKazhagam #Chengalpattu #TamilNaduNews #LocalNews #TamilNews













