Advertisement

40 சவரன் நகை கொள்ளை – செல்லப்பிராணிக்கு உணவு – பக்கத்து வீட்டுக்காரரே செய்த வேலை!

40 சவரன் நகை கொள்ளை சம்பவத்தில், வீட்டில் வளர்க்கும் நாய்க்கு உணவு வைப்பதற்காகக் கொடுக்கப்பட்ட சாவியைப் பயன்படுத்தி நகைகளைத் திருடியதாகப் பக்கத்து வீட்டில் வசித்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். திருடிய நகைகளை விற்று 4 கார்களை வாங்கி டிராவல்ஸ் தொழில் நடத்தியதாகக் கூறப்படும் சம்பவம் சிங்கப்பெருமாள் கோவில் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம், சிங்கப்பெருமாள் கோவில் அடுத்த செட்டிபுண்ணியம் பகுதியில் உள்ள தனியார் அடுக்குமாடிக் குடியிருப்பில் வசித்து வருபவர் ஹரி (28). இவர் அப்பகுதியில் உள்ள பெட்ரோல் பங்கில் மனிதவள மேலாளராகப் பணியாற்றி வருகிறார்.

Advertisement

ஹரி வேலைக்குச் செல்லும் நேரத்தில் வீட்டில் வளர்க்கும் நாய்க்கு உணவு வைப்பதற்காக, அதே அடுக்குமாடிக் குடியிருப்பில் பக்கத்து வீட்டில் வசிக்கும் கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த விஜய் (28) என்பவரிடம் வீட்டுச் சாவியைக் கொடுத்துள்ளார். விஜய் சில மாதங்களாக நாய்க்கு உணவு வைத்து வந்ததால், அவர் மீது ஹரி முழுமையான நம்பிக்கை வைத்திருந்ததாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு ஹரி தனது வீட்டின் பீரோவைத் திறந்து பார்த்தபோது, அதில் வைத்திருந்த 40 சவரன் தங்க நகைகள் காணாமல் போனது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர், சிங்கப்பெருமாள் கோவில் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

Advertisement

புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணையைத் தொடங்கினர். அடுக்குமாடிக் குடியிருப்பில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தபோது, ஹரியின் பக்கத்து வீட்டில் வசித்து வந்த விஜய் மீது சந்தேகம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில், ஹரி வீட்டில் இல்லாத நேரத்தில் அவரிடம் இருந்த சாவியைப் பயன்படுத்தி வீட்டுக்குள் சென்று, பீரோவில் வைத்திருந்த 40 சவரன் தங்க நகைகளை விஜய் திருடியதாகத் தெரியவந்துள்ளது.

மேலும், திருடப்பட்ட நகைகளை விற்று 4 கார்களை வாங்கியதுடன், டிராவல்ஸ் தொழிலும் தொடங்கியதாகக் கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி, கூடுதலாக 8 சவரன் தங்க நகைகளையும் வாங்கியதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்தச் சம்பவத்தில் விஜய்க்குத் துணையாக இருந்ததாகக் கூறப்படும் அவரது மைத்துனர் நவீன் (23) என்பவரையும் போலீசார் தேடி வருகின்றனர். இதையடுத்து விஜயைக் கைது செய்த போலீசார், அவர் மீது வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இச்சம்பவத்தைத் தொடர்ந்து, பொதுமக்கள் தங்களது வீட்டுச் சாவியை அக்கம் பக்கத்தினர் அல்லது வெளியாட்களிடம் கொடுத்துவிட்டுச் செல்வதில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என சிங்கப்பெருமாள் கோவில் போலீசார் அறிவுறுத்தியுள்ளனர். செல்லப்பிராணிகளைப் பராமரிக்க வேண்டிய சூழலில், வீட்டின் பாதுகாப்பைப் பாதிக்காத வகையில் மாற்று ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர்.

#40சவரன்நகைகொள்ளை #சிங்கப்பெருமாள்கோவில் #செட்டிபுண்ணியம் #நகைத்திருட்டு #பக்கத்துவீட்டுக்காரர் #வீட்டுச்சாவி #சிசிடிவி #விஜய் #நவீன் #காவல்துறை #செங்கல்பட்டு #கொள்ளைசம்பவம் #டிராவல்ஸ்தொழில் #தங்கநகை #வீட்டுபாதுகாப்பு #40SovereignGoldTheft #SingaperumalKoil #Chettipunniyam #GoldJewelleryTheft #HouseKeyTheft #NeighbourArrested #CCTVInvestigation #Vijay #Naveen #PoliceInvestigation #Chengalpattu #GoldTheftCase #TravelBusiness #HomeSecurity #CrimeNews #TamilNaduPolice

What is your reaction?

இதே போன்ற செய்திகள்

Advertisement