Advertisement

மழை வெள்ளத்தை சமாளிக்க என்ன தயார்? – கூடுவாஞ்சேரியில் ஆட்சியர் வீரப்பன் ஆய்வு!

மழை வெள்ள நிவாரணம் தொடர்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை ஆய்வு செய்த செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் வீரப்பன், கூடுவாஞ்சேரி நகராட்சிப் பகுதிகளில் மழைநீர் தேங்கினால், உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தொடங்கியுள்ள நிலையில், பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Advertisement

இதையடுத்து, செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் வீரப்பன், நந்திவரம் கூடுவாஞ்சேரி நகராட்சி அலுவலகத்தில் மழை மற்றும் வெள்ள நிவாரணப் பணிகளுக்குப் பயன்படுத்தப்பட உள்ள உபகரணங்களை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

மழைநீர் தேங்கும் பகுதிகளில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் மற்றும் வெள்ள நிவாரணப் பணிகளுக்கான தயார் நிலை குறித்து ஆய்வு செய்த அவர், கூடுவாஞ்சேரி நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மழைநீர் தேங்கினால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு செய்ய வேண்டும் என அறிவுறுத்தினார்.

Advertisement

மேலும், தேங்கியுள்ள மழைநீரை உடனடியாக வெளியேற்றுவதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு, பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.

வடகிழக்குப் பருவமழைக் காலத்தில் ஏற்படும் பாதிப்புகளைச் சமாளிக்க அதிகாரிகள் 24 மணி நேரமும் தயார் நிலையில் இருந்து பணியாற்ற வேண்டும் என மாவட்ட ஆட்சியர் வீரப்பன் அறிவுறுத்தியுள்ளார்.

#மழைவெள்ளநிவாரணம் #கூடுவாஞ்சேரி #நந்திவரம்கூடுவாஞ்சேரி #மாவட்டஆட்சியர்வீரப்பன் #வடகிழக்குப்பருவமழை #மழைநீர் #வெள்ளநிவாரணப்பணி #முன்னெச்சரிக்கைநடவடிக்கை #செங்கல்பட்டு #காஞ்சிபுரம் #திருவள்ளூர் #சென்னைமழை #பேரிடர்மேலாண்மை #24மணிநேரபணி #நகராட்சிநிர்வாகம் #FloodRelief #Guduvanchery #Nandivaram #DistrictCollectorVeerappan #NortheastMonsoon #RainwaterRemoval #FloodPreparedness #DisasterManagement #Chengalpattu #Kanchipuram #Tiruvallur #ChennaiRain #EmergencyResponse #MunicipalAdministration #TamilNaduNews

What is your reaction?

இதே போன்ற செய்திகள்

Advertisement