Advertisement

ஐ.ஐ.டி மற்றும் என்.ஐ.டி-க்களில் முதுநிலை படிப்புகளுக்கான ‘GATE 2027’ நுழைவுத் தேர்வு அறிவிப்பு!

இந்தியத் தொழில்நுட்பக் கழகங்கள் (IIT) மற்றும் தேசியத் தொழில்நுட்பக் கழகங்கள் (NIT) உள்ளிட்ட நாட்டின் புகழ்பெற்ற மத்திய உயர்கல்வி நிறுவனங்களில் M.E, M.Tech, M.Arch மற்றும் நேரடி முனைவர் (Ph.D) படிப்புகளில் சேருவதற்கும், முன்னணி பொதுத்துறை நிறுவனங்களில் (PSUs) வேலைவாய்ப்பு பெறுவதற்கும் அவசியமான ‘கேட் 2027’ (GATE 2027) நுழைவுத் தேர்வுக்கான அதிகாரப்பூர்வ அட்டவணையை சென்னை இந்தியத் தொழில்நுட்பக் கழகம் (IIT Madras) தற்பொழுது வெளியிட்டுள்ளது.மத்தியக் கல்வி அமைச்சகத்தின் சார்பாக ஆண்டுதோறும் நடத்தப்படும் இந்த பட்டதாரி பொறியியல் தகுதித் தேர்வை (Graduate Aptitude Test in Engineering) இந்த ஆண்டு சென்னை ஐ.ஐ.டி (IIT Madras) நிர்வாகம் ஒருங்கிணைத்து நடத்துகிறது. இதற்கான பிரத்யேக இணையதளப் பக்கத்தை (gate2027.iitm.ac.in) சென்னை ஐ.ஐ.டி இன்று அதிகாரப்பூர்வமாகத் தொடங்கி இயக்கி வருகிறது.

முக்கியத் தேதிகள் மற்றும் விண்ணப்பிக்கும் முறை:

Advertisement

விண்ணப்பப் பதிவுத் தொடக்கம்: வழக்கமான கட்டணத்துடன் ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முறை வரும் ஆகஸ்ட் 14, 2026 முதல் தொடங்குகிறது.

கடைசித் தேதி: தாமதக் கட்டணமின்றி விண்ணப்பிக்கச் செப்டம்பர் 21, 2026 கடைசி நாளாகும். அபராதக் கட்டணத்துடன் செப்டம்பர் 30 வரை விண்ணப்பிக்க அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.

Advertisement

தேர்வு நடைபெறும் நாட்கள்: கணினி வழித் தேர்வாக (CBT) நடைபெறும் GATE 2027 தேர்வுகள், 2027 பிப்ரவரி 6, 7, 13, 14, 20 மற்றும் 21 ஆகிய தேதிகளில் காலை மற்றும் பிற்பகல் என இரு வேளைகளாக நாடு முழுவதும் நடத்தப்படவுள்ளது.

புதிய மாற்றங்கள் & கல்வித் தகுதி:இந்த ஆண்டு GATE தேர்வில் ‘ரோபாட்டிக்ஸ் மற்றும் ஆட்டோமேஷன்’ (Robotics and Automation) என்ற புதிய பாடப்பிரிவு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் 5 ஆண்டுகளுக்குப் பிறகு அனைத்துப் பாடப்பிரிவுகளுக்குமான பாடத்திட்டம் (Syllabus) தற்போதைய தொழில்முறைத் தேவைகளுக்கு ஏற்ப முறைப்படி மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

பொறியியல், தொழில்நுட்பம், அறிவியல் மற்றும் கலை சார்ந்த இளங்கலை பட்டப்படிப்புகளின் இறுதி ஆண்டில் பயிலும் மாணவர்கள் அல்லது படிப்பை முடித்தவர்கள் இத்தேர்விற்கு விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள். விண்ணப்பதாரர்கள் தங்களது DigiLocker கணக்கு மற்றும் நேரடி முக அங்கீகாரச் சரிபார்ப்பு (Facial Recognition) மூலம் விண்ணப்பிக்கும் புதிய பாதுகாப்பு நடைமுறையும் இந்த முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

 

 

What is your reaction?

இதே போன்ற செய்திகள்

Advertisement