செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள தாசில்தார் அலுவலகங்களில், விவசாயிகள் நலன்காக்கும் நாள் கூட்டம் வரும் ஜூன் 19ஆம் தேதி நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியர் வீரப்பன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், செங்கல்பட்டு தாசில்தார் அலுவலகத்தில் தாசில்தார் பாலாஜி தலைமையிலும், மதுராந்தகம் தாசில்தார் நரேந்திரன் மற்றும் தாம்பரம் தாசில்தார் முரளி தலைமையிலும் விவசாயிகள் நலன்காக்கும் நாள் கூட்டங்கள் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கூட்டங்களில் விவசாயிகள் நேரில் பங்கேற்று, வேளாண்மை மற்றும் விவசாயம் சார்ந்த பிரச்சினைகள், கோரிக்கைகள் மற்றும் குறைகளை மனுக்களாக அளிக்கலாம். பெறப்படும் மனுக்கள் மீது சம்பந்தப்பட்ட துறைகள் மூலம் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, விவசாயிகள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி தங்களது கோரிக்கைகள் மற்றும் பிரச்சினைகளை அதிகாரிகளிடம் நேரடியாக தெரிவித்து பயன்பெறுமாறு மாவட்ட நிர்வாகம் அழைப்பு விடுத்துள்ளது.




