மாணவர்களுக்கு போதைப்பொருள் விழிப்புணர்வு; ஆட்சியர் வீரப்பன் பங்கேற்பு

செங்கல்பட்டு புனித சூசையப்பர் மேல்நிலைப் பள்ளியில், பள்ளி கல்வித்துறை, மதுவிலக்கு அமலாக்கத்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் போதைப்பொருள் தடுப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி இன்று (ஜூன் 19) நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் மு. வீரப்பன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவர்களிடம் போதைப்பொருட்களின் தீமைகள், அதன் சமூக பாதிப்புகள் மற்றும் இளைஞர்கள் போதைப் பழக்கத்திலிருந்து விலகி இருக்க வேண்டிய அவசியம் குறித்து சிறப்புரையாற்றினார்.

மேலும், மாணவர்கள் தங்களது எதிர்காலத்தை பாதுகாக்க கல்வி மற்றும் ஒழுக்கத்தை முதன்மையாகக் கொண்டு செயல்பட வேண்டும் என்றும், போதைப்பொருள் தொடர்பான தகவல்கள் கிடைத்தால் உடனடியாக அதிகாரிகளுக்கு தெரிவிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.

இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கல்வித்துறை, மதுவிலக்கு அமலாக்கத்துறை அதிகாரிகள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

What is your reaction?

இதே போன்ற செய்திகள்