செங்கல்பட்டு நகரில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் Rahul Gandhi அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு காங்கிரஸ் கட்சியினர் சமூகநல நிகழ்ச்சிகளை நடத்தி சிறப்பாக கொண்டாடினர்.
நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக குழந்தைகளுடன் இணைந்து கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. தொடர்ந்து குழந்தைகளுக்கு உணவு வழங்கப்பட்டதுடன், சீருடைகளும் ஏற்பாடு செய்து வழங்கப்பட்டன. மேலும், தேவையுடையோருக்கு நிதியுதவியும் வழங்கப்பட்டது.
இந்த நிகழ்வில் காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டு ராகுல் காந்திக்கு பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்தனர். சமூகநல சேவைகள் மூலம் பொதுமக்களுடன் இணைந்து பிறந்தநாளை கொண்டாடிய இந்த நிகழ்வு கவனம் பெற்றது.





