பேருக்கு ஒரு மாதத்திற்குள் புதிய ரேஷன் அட்டைகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
செங்கல்பட்டு, மதுராந்தகம், செய்யூர், திருக்கழுக்குன்றம், திருப்போரூர் மற்றும் வண்டலூர் உள்ளிட்ட ஆறு தாலுகாக்களை உள்ளடக்கிய மாவட்ட வழங்கல் அலுவலக கட்டுப்பாட்டுப் பகுதிகளில், 2025 டிசம்பர் முதல் 2026 மார்ச் வரை மொத்தம் 6,364 பேர் புதிய ரேஷன் அட்டைக்காக விண்ணப்பித்திருந்தனர்.
விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யப்பட்டதில் 1,666 மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன. மேலும் 1,335 மனுக்கள் நிராகரிக்கப்பட்ட நிலையில், 3,363 விண்ணப்பங்கள் விசாரணைக்காக நிலுவையில் உள்ளன.
தற்போது செங்கல்பட்டு தாலுகாவில் 756, மதுராந்தகத்தில் 366, செய்யூரில் 395, திருக்கழுக்குன்றத்தில் 209, திருப்போரூரில் 646 மற்றும் வண்டலூரில் 991 விண்ணப்பங்கள் பரிசீலனையில் உள்ளன.
ரேஷன் அட்டை பேரிடர் நிவாரணம், கல்வி சேர்க்கை, ஜாதிச் சான்றிதழ், மகளிர் உரிமைத்தொகை உள்ளிட்ட பல்வேறு அரசு நலத்திட்டங்களை பெற முக்கிய ஆவணமாக இருப்பதால், புதிய அட்டைக்காக மக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.
சட்டசபை தேர்தல் அறிவிப்பால் கடந்த ஆறு மாதங்களாக புதிய ரேஷன் அட்டை வழங்கும் பணிகள் தாமதமானதாக கூறப்படுகிறது. இந்நிலையில், ஏற்கப்பட்ட 1,666 விண்ணப்பதாரர்களுக்கு ஒரு மாதத்திற்குள் அட்டைகள் வழங்கப்பட உள்ளதாகவும், மீதமுள்ள 3,363 விண்ணப்பங்களும் விரைவாக பரிசீலனை செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் வட்ட வழங்கல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.





