செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் வேலைவாய்ப்பு முகாமில் பணி ஆணை வழங்கினார்

0
2

செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், மேம்பட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம் சார்பில் சிறப்பு வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது.

இந்த முகாமில் பல்வேறு தனியார் நிறுவனங்கள் பங்கேற்று வேலைவாய்ப்புகளை வழங்கின. முகாமில் தேர்வான இளைஞர்களுக்கு செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் மு. வீரப்பன் இன்று (ஜூன் 19) நேரடியாக பணி ஆணைகளை வழங்கி வாழ்த்தினார்.

வேலைவாய்ப்பு முகாம்கள் மூலம் இளைஞர்களுக்கு தகுந்த வேலைவாய்ப்புகளை உருவாக்க மாவட்ட நிர்வாகம் தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவிக்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் ருக்மாங்கதன், மாவட்ட திறன் அலுவலர் காவேரி உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.