Advertisement

பாலியல் குற்றங்களில் ஈடுபடுபவர்களைச் சுட்டுத் தள்ள வேண்டும்: காட்பாடியில் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் ஆவேசம்!

தமிழகத்தில் அதிகரித்து வரும் பாலியல் குற்றங்களில் ஈடுபடுபவர்களைச் சட்டப்படி தண்டித்துச் சுட்டுத் தள்ள வேண்டும் என்று திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் ஆவேசமாகத் தெரிவித்துள்ளார்.

வேலூர் மாவட்டம் காட்பாடியில் இன்று மாலை திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது, தமிழக நிதி அமைச்சர் மரிய வில்சன் ‘நிதி’ என்பதற்குப் பதிலாகத் தனது உச்சரிப்பில் ‘நீதி’ என்று சொல்கிறாரே எனச் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த துரைமுருகன், “அந்தோ தமிழகமே” என்று மாநிலத்தின் நிலைமையைப் பாருங்கள் எனக் கிண்டலாகக் குறிப்பிட்டார். தொடர்ந்து மேகதாது அணைப் பிரச்சினை குறித்துப் பேசிய அவர், மேகதாது அணைப் பிரச்சினை தொடர்பாகக் கர்நாடக முதலமைச்சர் தெரிவிக்கும் பல கருத்துக்கள் இரு மாநில மக்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை வலியுறுத்தி, தமிழக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் உடனடியாகக் கடிதம் எழுத வேண்டும் என்றும், அப்படி எழுதினால் அந்த கடிதத்திற்கு என்ன பதில் வருகிறது என்பதைப் பார்க்க வேண்டும் என்றும் கூறினார்.

Advertisement

மேலும், தமிழக முதலமைச்சர் அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி, அந்த கூட்டத்தில் தீர்மானத்தை நிறைவேற்றி மத்திய அரசுக்கும் கர்நாடகாவிற்கும் அனுப்பி இருக்க வேண்டும் என்றும், இதுவரை அப்படிச் செய்யவில்லை என்றாலும் இனிமேலாவது அதனைப் பேரவை விதிகளின்படி கண்டிப்பாகச் செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தினார். காவிரிப் பிரச்சினையில் இதற்கு முன்பு இருந்த முதலமைச்சர்கள் அனைவரும் அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி உள்ளனர் என்று சுட்டிக்காட்டிய அவர், தற்பொழுது உள்ள முதலமைச்சர் அனைத்துக் கட்சிக் கூட்டத்தை இன்னும் கூட்டவில்லை என்றும், சர்வ கட்சிக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும் என்பது தற்போதைய முதலமைச்சருக்குத் தெரியாது என்றும் கறாராக விமர்சித்தார். புதிய தவெக அரசு அமைந்து ஒரு மாத காலம் நிறைவடைந்துள்ள சூழலில், இந்த ஒரு மாத கால ஆட்சியில் மக்களின் எந்த ஒரு எதிர்பார்ப்பும் நிறைவேறவில்லை என்றும் அவர் குற்றஞ்சாட்டினார்.

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு மற்றும் அதிகரித்து வரும் பாலியல் குற்றங்கள் குறித்த செய்திகளைப் படிக்கவே மனது வரவில்லை என்று வேதனை தெரிவித்த துரைமுருகன், இத்தகைய கொடூரச் செயல்களில் ஈடுபடுபவர்களைச் சட்டப்படி தண்டித்துச் சுட வேண்டும் என்று கூறினார். தவெக சார்பில் பெண்களின் பாதுகாப்புக்காக அண்மையில் ‘சிங்கப்படை’ என்ற புதிய உள்கட்டமைப்பு அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது குறித்துச் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு, “சிங்கப்படையோ கிங்கப்படையோ… தவறு செய்பவர்களைச் சுட்டுத் தள்ள வேண்டும்” என்று துரைமுருகன் மிகவும் ஆவேசமாகப் பதிலளித்தார். துரைமுருகனின் இந்த அதிரடிப் பேட்டி தமிழக அரசியல் மற்றும் காவல்துறை வட்டாரங்களில் தற்பொழுது பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது.

Advertisement

 

 

 

:

What is your reaction?

இதே போன்ற செய்திகள்

Advertisement