Advertisement
,

பாரத் பெட்ரோலியத்தில் 250 பணியிடங்கள் அறிவிப்பு

Bharat Petroleum Corporation Limited நிறுவனத்தில் ஜூனியர் எக்சிக்யூட்டிவ் மற்றும் அசோசியேட் எக்சிக்யூட்டிவ் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்காக மொத்தம் 250 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இன்ஜினியரிங், அக்கவுன்ட்ஸ், அலுவல் மொழி, வே சைட் அம்னிட்டிஸ் உள்ளிட்ட பிரிவுகளில் தகுதியானவர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

ஜூனியர் எக்சிக்யூட்டிவ் (Engineering) பிரிவில் 175 இடங்கள் நிரப்பப்படுகின்றன. மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், இன்ஸ்ட்ருமென்டேஷன், எலக்ட்ரானிக்ஸ், சிவில் அல்லது கெமிக்கல் இன்ஜினியரிங் துறைகளில் டிப்ளமோ அல்லது பட்டப்படிப்பு முடித்து 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். வயது வரம்பு 32 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Advertisement

அக்கவுன்ட்ஸ் பிரிவில் 25 ஜூனியர் எக்சிக்யூட்டிவ் பணியிடங்கள் உள்ளன. சிஏ அல்லது சிஎம்ஏ தேர்ச்சி மற்றும் 5 ஆண்டு அனுபவம் அவசியம். வயது 30 முதல் 35க்குள் இருக்க வேண்டும். மேலும், வே சைட் அம்னிட்டிஸ் பிரிவில் 10 இடங்களும், செக்ரட்டரி பிரிவில் 8 இடங்களும் அறிவிக்கப்பட்டுள்ளன.

இதற்கான சம்பளம் ரூ.30,000 முதல் ரூ.1,20,000 வரை வழங்கப்படும். அசோசியேட் எக்சிக்யூட்டிவ் பிரிவில் 30 பணியிடங்கள் உள்ளன. வேதியியல் துறையில் முதுகலை பட்டப்படிப்பு மற்றும் 3 ஆண்டு அனுபவம் அவசியம். அலுவல் மொழி நிறைவேற்றம் பிரிவில் இந்தி முதுகலை பட்டதாரிகளுக்கு 2 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்த பிரிவுகளுக்கான சம்பளம் ரூ.40,000 முதல் ரூ.1,40,000 வரை வழங்கப்படும்.

Advertisement

விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வு, குழு விவாதம் மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவர். பொதுப்பிரிவு மற்றும் ஓபிசி விண்ணப்பதாரர்களுக்கு ரூ.1,100 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு கட்டணம் இல்லை.

விருப்பமுள்ளவர்கள் www.bharatpetroleum.in மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

What is your reaction?

இதே போன்ற செய்திகள்

Advertisement