Advertisement

“தலைமுறைகளைக் கடந்த அழகிய சந்திப்பு” – நடிகை ஸ்ரீலீலாவை சந்தித்து சிம்ரன் நெகிழ்ச்சி

தென்னிந்தியத் திரையுலகின் கனவுக்கன்னியாகத் திகழ்ந்த மூத்த நடிகை சிம்ரனும், தற்போதைய இளைஞர்களின் இதயங்களைக் கவர்ந்து வரும் பிரபல நடிகை ஸ்ரீலீலாவும் சமீபத்தில் நேரில் சந்தித்துப் பேசிக்கொண்ட சுவாரஸ்யமான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றன.

தமிழ் மற்றும் தெலுங்குச் சினிமாவில் தனக்கெனத் தனி முத்திரை பதித்த நடிகை சிம்ரன், நடிகை ஸ்ரீலீலாவுடன் தான் எடுத்துக்கொண்ட அழகியப் புகைப்படங்களைத் தனது அதிகாரப்பூர்வச் சமூக வலைதளப் பக்கங்களில் பகிர்ந்துள்ளார. அப்பதிவில் ஸ்ரீலீலாவைப் வெகுவாகப் பாராட்டிய சிம்ரன், “மிதமிஞ்சியத் திறமையையும், அபாரமான நேர்மறை ஆற்றலையும் (Positive Energy) இயல்பாகவே தனக்குள்ளே கொண்டிக்கும் ஒருவரைச் சந்தித்துப் உரையாடியது மிகவும் அற்புதமாக இருந்தது. கலைத்துறையில் தொடர்ந்து மென்மேலும் வளருங்கள்; மற்றவர்களுக்கு உத்வேகமாகத் திகழுங்கள்” எனக் குறிப்பிட்டு ஸ்ரீலீலாவிற்குத் தனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

Advertisement

சிம்ரனின் இந்த நெகிழ்ச்சியான பாராட்டுப் பதிவிற்கு உடனடியாகப் பதிலளித்த நடிகை ஸ்ரீலீலா, “நீங்கள் அளவற்ற அன்பும் அரவணைப்பும் கொண்ட ஒரு அற்புதமான மனிதர் மேடம். உங்களைச் சந்தித்தது எனக்குக் கிடைத்தப் பெருமை. நீங்கள் ஒரு முழு தலைமுறையின் மாபெரும் உத்வேகம் (Inspiration of a generation)” எனக் நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுத் தனது மரியாதையை வெளிப்படுத்தியுள்ளார்.

தென்னிந்தியச் சினிமாவின் இரு வேறு தலைமுறைகளைச் சேர்ந்த இரு முன்னணி நடன மற்றும் நடிப்பு வீராங்கனைகளின் இந்த அன்புச் சந்திப்பும், பரஸ்பரப் பாராட்டுக்களும் தற்போது திரையுலகினரையும் ரசிகர்களையும் பெரிதும் கவர்ந்து இணையத்தில் வைரலாகப் பகிரப்பட்டு வருகிறது.

Advertisement

 

 

What is your reaction?

இதே போன்ற செய்திகள்

Advertisement