செங்கல்பட்டு சட்டமன்றத் தொகுதியில் திமுகவின் வளர்ச்சியை வலுப்படுத்தும் வகையில், பல்வேறு மாற்றுக் கட்சிகளைச் சேர்ந்த 60-க்கும் மேற்பட்டோர் திமுகவில் இணைந்தனர்.
கஜேந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்த இணைப்பு நிகழ்ச்சியில், காஞ்சி வடக்கு மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான தா.மோ. அன்பரசன் கலந்து கொண்டு, புதிதாக கட்சியில் இணைந்தவர்களை வரவேற்று வாழ்த்தினார்.
திமுக அரசின் மக்கள் நலத் திட்டங்கள் மற்றும் கட்சியின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு தாங்கள் திமுகவில் இணைவதாக புதிய உறுப்பினர்கள் தெரிவித்தனர். மேலும், கட்சியின் வளர்ச்சிக்காக முழுமையாக செயல்பட உறுதி எடுத்துக்கொண்டனர்.
நிகழ்ச்சியில் திமுக மாவட்ட, ஒன்றிய மற்றும் நகர நிர்வாகிகள், கட்சி தொண்டர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.





