Advertisement

3 நாட்கள் டாஸ்மாக் மூடல் – மதுப்பிரியர்களால் போக்குவரத்து நெரிசல்

3 நாட்கள் டாஸ்மாக் மூடல் காரணமாக செங்கல்பட்டில் உள்ள அரசு மதுபானக் கடைகளில் மதுப்பிரியர்கள் ஆயிரக்கணக்கில் குவிந்ததால் ஜி.எஸ்.டி. சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் வரும் அக்டோபர் 6ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், தேர்தல் பிரச்சாரம் நிறைவடைந்துள்ளது. திமுக, அதிமுக, தமிழக வெற்றிக் கழகம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் தலைவர்கள், அமைச்சர்கள் மற்றும் நட்சத்திரப் பேச்சாளர்கள் தீவிரமாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

Advertisement

தேர்தல் அமைதியாகவும், அசம்பாவிதங்கள் இன்றியும் நடைபெறுவதை உறுதி செய்யும் வகையில், அக்டோபர் 4ஆம் தேதி முதல் வாக்குப்பதிவு நாளான அக்டோபர் 6ஆம் தேதி வரை தொடர்ந்து 3 நாட்களுக்கு செங்கல்பட்டு மாவட்டம் முழுவதும் அரசு டாஸ்மாக் கடைகள் மற்றும் தனியார் நட்சத்திர விடுதி பார்களை மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

இந்த உத்தரவை மீறி சட்டவிரோதமாக மது விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Advertisement

இதனால் அடுத்த 3 நாட்களுக்குத் தேவையான மதுபானங்களை வாங்க செங்கல்பட்டில் உள்ள டாஸ்மாக் கடைகளில் மதுப்பிரியர்கள் ஒரே நேரத்தில் திரண்டனர். குறிப்பாக செங்கல்பட்டு – மதுராந்தகம் பிரதான ஜி.எஸ்.டி. சாலையில் செயல்பட்டு வரும் அரசு மதுபானக் கடையில் மதுபாட்டில்களை வாங்க மதுப்பிரியர்கள் போட்டி போட்டுக் கொண்டு குவிந்ததால் அப்பகுதி முழுவதும் கூட்ட நெரிசல் காணப்பட்டது.

மேலும், மது வாங்க வந்தவர்கள் தங்களது வாகனங்களை ஜி.எஸ்.டி. சாலையின் இருபுறங்களிலும் சீரற்ற முறையில் நிறுத்திவிட்டுச் சென்றதால், சாலையின் அகலம் மேலும் குறைந்தது. இதனுடன் மக்கள் நடமாட்டமும் அதிகரித்ததால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

இதனால் அவ்வழியாகச் சென்ற பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர்.

#3நாட்கள்டாஸ்மாக்மூடல் #டாஸ்மாக் #செங்கல்பட்டு #மதுராந்தகம் #மதுராந்தகம்இடைத்தேர்தல் #ஜிஎஸ்டிசாலை #போக்குவரத்துநெரிசல் #மதுப்பிரியர்கள் #மது #டாஸ்மாக்மதுபானக்கடை #தேர்தல் #இடைத்தேர்தல் #செங்கல்பட்டுசெய்தி #GSTசாலை #3DaysTASMACClosure #TASMAC #Chengalpattu #Madurantakam #MadurantakamByElection #GSTRoad #TrafficCongestion #LiquorShop #TASMACShop #Election #ByElection #TamilNaduNews #ChengalpattuNews #TrafficNews #ElectionNews #TASMACClosure

What is your reaction?

இதே போன்ற செய்திகள்

Advertisement