விடுமுறை முடிஞ்சாச்சு… இதையடுத்து சொந்த ஊர்களுக்குச் சென்ற தென் மாவட்ட மக்கள் மீண்டும் சென்னைக்கு சாரை சாரையாக திரும்பத் தொடங்கியதால், கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் பகுதியில் பயணிகள் கூட்டம் அலைமோதுகிறது.
காலாண்டு விடுமுறை மற்றும் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு தொடர் விடுமுறை விடப்பட்டிருந்ததால், தென் மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமான மக்கள் தங்களது சொந்த ஊர்களுக்குச் சென்றிருந்தனர். விடுமுறை முடிவடைந்த நிலையில், நாளை பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலகங்கள் மற்றும் தனியார் நிறுவனங்கள் வழக்கம்போல் செயல்பட உள்ளதால், பல்லாயிரக்கணக்கானோர் அரசு மற்றும் ஆம்னி பேருந்துகள் மூலம் சென்னைக்கு திரும்பி வருகின்றனர்.
வெளியூர்களில் இருந்து வரும் பேருந்துகள், கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்கு எதிரே உள்ள திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பயணிகளை இறக்கி விடுகின்றன. அங்கிருந்து சென்னை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளுக்குச் செல்ல வேண்டிய பயணிகள், தேசிய நெடுஞ்சாலையைக் கடந்து பேருந்து நிலைய வளாகத்திற்குள் சென்று மாநகரப் பேருந்துகளில் பயணம் மேற்கொள்கின்றனர்.
ஒரே நேரத்தில் ஏராளமான பயணிகள் வந்து இறங்குவதால் கிளாம்பாக்கம் பகுதியில் கடும் கூட்ட நெரிசல் காணப்படுகிறது. பயணிகள் தங்களது பகுதிகளுக்கு எளிதாகச் செல்லும் வகையில் கூடுதல் மாநகரப் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.
இருப்பினும், ஒரே நேரத்தில் அதிகப்படியான மக்கள் பேருந்து நிலையத்திற்கு வருவதால் மாநகரப் பேருந்துகளுக்காக காத்திருந்து செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் பரபரப்பான சூழல் நிலவுகிறது.
#விடுமுறைமுடிஞ்சாச்சு #கிளாம்பாக்கம் #கிளாம்பாக்கம்பேருந்துநிலையம் #கூட்டநெரிசல் #சென்னைக்குதிரும்பும்மக்கள் #தென்மாவட்டங்கள் #காலாண்டுவிடுமுறை #காந்திஜெயந்தி #அரசுபேருந்து #ஆம்னிபேருந்து #மாநகரபேருந்து #பயணிகள்நெரிசல் #சென்னைபோக்குவரத்து #விடுமுறைபயணம் #HolidayOver #Kilambakkam #KilambakkamBusTerminus #CrowdRush #Chennai #ReturnToChennai #SouthernDistricts #HolidayRush #GovernmentBuses #OmniBuses #MTCBuses #PassengerRush #TrafficCongestion #ChennaiTransport #HolidayTravel #TamilNaduNews













