Advertisement

வண்டலூரில் வனவிலங்கு தட ஓட்டம் – ஆயிரம் பேர் பங்கேற்பு

வனவிலங்கு தட ஓட்டம் வனவிலங்கு வாரம் 2026 கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக சென்னை வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா சார்பில் இன்று நடைபெற்றது. இதில் ஆயிரம் பேர் வரை ஆர்வத்துடன் பங்கேற்று ஓடினர்.

5 கிலோமீட்டர் தூரம் நடைபெற்ற இந்த ஓட்டப்பந்தயம், இயற்கை எழில் சூழ்ந்த வனப்பகுதி வழியாக நடைபெற்றது. இதில் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.

Advertisement

நிகழ்ச்சியில் சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் கர்கலா உஷா ஐ.ஏ.எஸ், முதன்மை தலைமை வனப் பாதுகாவலர் மற்றும் வனப் படையின் தலைவர் உதயன் ஐ.எஃப்.எஸ், முதன்மை தலைமை வனப் பாதுகாவலர் மற்றும் தலைமை வனவிலங்கு காப்பாளர் ராகேஷ் குமார் தோக்ரா ஐ.எஃப்.எஸ், அறிஞர் அண்ணா விலங்கியல் பூங்கா இயக்குநர் ரிட்டோ சிரியாக் ஐ.எஃப்.எஸ் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

சிறப்பு விருந்தினர்களும் வனவிலங்கு தட ஓட்டத்தில் பங்கேற்று, ஓட்டப்பந்தயத்தில் கலந்து கொண்டவர்களை உற்சாகப்படுத்தினர்.

Advertisement

தொடர்ந்து ஆண் மற்றும் பெண் பிரிவுகளில் வெற்றி பெற்றவர்களுக்கு ரொக்கப் பரிசுகள் மற்றும் கோப்பைகள் வழங்கப்பட்டு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

#வனவிலங்குதடஓட்டம் #வண்டலூர் #வனவிலங்குவாரம்2026 #அறிஞர்அண்ணாஉயிரியல் பூங்கா #வனவிலங்கு #தடஓட்டம் #சென்னை #வனத்துறை #சுற்றுச்சூழல் #இயற்கை #5கிலோமீட்டர் #ஓட்டப்பந்தயம் #Vandalur #WildlifeTrailRun #WildlifeWeek2026 #ArignarAnnaZoologicalPark #Wildlife #TrailRun #Chennai #ForestDepartment #Environment #Nature #5KRun #RunningEvent

What is your reaction?

இதே போன்ற செய்திகள்

Advertisement