Advertisement
,

வெற்றிக்குப் பிறகு நன்றி விசிட்! – கிராமம் கிராமமாக வரவேற்கப்படும் மரகதம் குமரவேல்

மரகதம் குமரவேல் நன்றி பயணம் மதுராந்தகம் தொகுதியில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இடைத்தேர்தலில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, பல்வேறு பகுதிகளுக்குத் திறந்தவெளி வாகனத்தில் சென்று, வாக்களித்த மக்களுக்கு அவர் நன்றி தெரிவித்து வருகிறார்.

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் போட்டியிட்ட மரகதம் குமரவேல், 72,354 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.
இதையடுத்து தொகுதி மக்களை நேரில் சந்தித்து நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சியில் அவர் ஈடுபட்டு வருகிறார். மதுராந்தகம் தொகுதிக்கு உட்பட்ட ஈசூர், பூதூர், கீழவலம், கினார் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்குத் திறந்தவெளி வாகனத்தில் சென்று பொதுமக்களைச் சந்தித்து வருகிறார்.

Advertisement

அப்போது மரகதம் குமரவேலுக்கு அப்பகுதி மக்கள் உற்சாக வரவேற்பு அளித்து வருகின்றனர். பெண்கள் ஆரத்தி எடுத்தும், மாலை அணிவித்தும், இனிப்புகள் வழங்கியும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.

இடைத்தேர்தலில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, தொகுதி முழுவதும் மக்களைச் சந்தித்து நன்றி தெரிவித்து வரும் மரகதம் குமரவேலுக்கு பல்வேறு பகுதிகளில் கிடைத்து வரும் வரவேற்பு கவனம் ஈர்த்துள்ளது.

Advertisement

#மரகதம்குமரவேல் #நன்றிபயணம் #மதுராந்தகம் #மதுராந்தகம்இடைத்தேர்தல் #தமிழகவெற்றிக்கழகம் #தவெக #தேர்தல்வெற்றி #வாக்காளர்களுக்கு_நன்றி #ஈசூர் #பூதூர் #கீழவலம் #கினார் #மக்கள்வரவேற்பு #திறந்தவெளிவாகனம் #செங்கல்பட்டு #MaragathamKumaravel #ThankYouTour #Madurantakam #MadurantakamByElection #TVK #TamilagaVettriKazhagam #ElectionVictory #VoterThanks #Esur #Boothur #Keezhavalum #Kinar #PublicReception #Chengalpattu #TamilNaduPolitics

What is your reaction?

இதே போன்ற செய்திகள்

Advertisement