Advertisement

பரனூர் சுங்கச்சாவடி வசூல் மையம் நிறைவு – இனி வாகனங்கள் நிற்காமல் செல்லலாம்

பரனூர் சுங்கச்சாவடி வசூல் மையம் கடந்த 2006ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வந்த நிலையில், அதன் பழைய கட்டண வசூல் முறை தற்போது நிறைவடைந்துள்ளது. வாகனங்கள் வரிசையில் காத்திருப்பதைத் தவிர்க்கும் வகையில் Multi-Lane Free Flow (MLFF) என்ற தடையற்ற தானியங்கி சுங்கக் கட்டண வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இதன் காரணமாக இதுவரை வாகனங்கள் சுங்கக் கட்டணம் செலுத்துவதற்காக நின்று வந்த கட்டண வசூல் மையங்கள் மற்றும் தடுப்புகள் அகற்றப்பட்டுள்ளன. இதனால் பரனூர் சுங்கச்சாவடி பகுதி தற்போது பழைய கட்டமைப்புகள் அகற்றப்பட்ட நிலையில் காணப்படுகிறது.

Advertisement

புதிய முறையில் வாகனங்கள் வேகத்தைக் குறைக்காமல், சுங்கக் கட்டண தடுப்புகளுக்காக காத்திருக்காமல் நேரடியாகச் செல்லும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வாகனங்களில் பொருத்தப்பட்டுள்ள FASTag-ஐ வாசிக்கும் RFID கருவியும், வாகனப் பதிவு எண்ணைப் படம் பிடிக்கும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் கொண்ட ANPR கேமராவும் ஒரே நேரத்தில் செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய தொழில்நுட்பக் கருவிகள் மின் விளக்குகளுடன் அமைக்கப்பட்டு, நள்ளிரவு 12 மணி முதல் அதிகாரப்பூர்வமாக பயன்பாட்டுக்கு வந்துள்ளன. குறிப்பாக தொடர் விடுமுறை மற்றும் விழாக்காலங்களில் சுங்கச்சாவடிகளில் ஏற்படும் வாகன நெரிசல், காத்திருப்பு நேரம் மற்றும் எரிபொருள் விரயத்தை குறைக்கும் வகையில் இந்த மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது.

Advertisement

#பரனூர் #பரனூர்சுங்கச்சாவடி #சுங்கச்சாவடி #வசூல்மையம் #சுங்கக்கட்டணம் #MLFF #FASTag #RFID #ANPR #புதியதொழில்நுட்பம் #வாகனநெரிசல் #தேசியநெடுஞ்சாலை #பரனூர்சுங்கச்சாவடிவசூல்மையம் #Paranur #ParanurTollPlaza #TollPlaza #TollCollectionCenter #TollFee #MLFF #FASTag #RFID #ANPR #NewTechnology #Traffic #NationalHighways #FreeFlowTolling

What is your reaction?

இதே போன்ற செய்திகள்

Advertisement