சென்னை பக்கம் ஒரே படையெடுப்பு போல தென் மாவட்டங்கள் மற்றும் சொந்த ஊர்களில் இருந்து ஏராளமான மக்கள் ஒரே நேரத்தில் திரும்பத் தொடங்கியதால், சிங்கப்பெருமாள் கோவில் முதல் மகேந்திரா சிட்டி வரை சுமார் 5 கிலோமீட்டர் தூரத்திற்கு திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
காலாண்டுத் தேர்வு மற்றும் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு தொடர் விடுமுறை விடப்பட்டிருந்தது. இதையடுத்து விடுமுறையை கொண்டாடுவதற்காக பல்வேறு பகுதிகளுக்குச் சென்ற பொதுமக்கள், விடுமுறை முடிவடைந்த நிலையில் தற்போது சென்னைக்கு திரும்பி வருகின்றனர்.
குறிப்பாக நாளை திங்கட்கிழமை என்பதால் பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலகங்கள் மற்றும் தனியார் நிறுவனங்கள் மீண்டும் வழக்கம்போல் செயல்பட உள்ளன. இதனால் சொந்த ஊர்களுக்குச் சென்ற பல்லாயிரக்கணக்கான மக்கள் ஒரே நேரத்தில் சென்னை நோக்கி திரும்பி வருகின்றனர்.
இதன் காரணமாக சிங்கப்பெருமாள் கோவில் முதல் மகேந்திரா சிட்டி வரை சுமார் 5 கிலோமீட்டர் தூரத்திற்கு அரசுப் பேருந்துகள், ஆம்னி பேருந்துகள், கார்கள் உள்ளிட்ட அனைத்து வகையான வாகனங்களும் ஒன்றன்பின் ஒன்றாக அணிவகுத்து நின்று, மெதுவாக ஊர்ந்து செல்கின்றன.
பல இடங்களில் வாகனங்கள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதால் பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.
போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்தும் வகையில் போலீசார் ஆங்காங்கே பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இருப்பினும் ஒரே நேரத்தில் அதிகப்படியான வாகனங்கள் சென்னை நோக்கி வருவதால், நெரிசலை முழுமையாக சமாளிக்க முடியாமல் போலீசார் திணறி வருகின்றனர்.
#சென்னைபக்கம்ஒரேபடையெடுப்பு #சென்னை #சிங்கப்பெருமாள்கோவில் #மகேந்திராசிட்டி #5கிமீ #போக்குவரத்துநெரிசல் #தேசியநெடுஞ்சாலை #சென்னைக்குதிரும்பும்மக்கள் #தென்மாவட்டங்கள் #விடுமுறைமுடிவு #காலாண்டுவிடுமுறை #காந்திஜெயந்தி #அரசுபேருந்து #ஆம்னிபேருந்து #கார்கள் #போலீசார் #செங்கல்பட்டு #Chennai #ChennaiTraffic #SingaperumalKoil #MahindraCity #TrafficJam #TrafficCongestion #NationalHighway #ReturnToChennai #SouthernDistricts #HolidayRush #GovernmentBuses #OmniBuses #Cars #Chengalpattu













