செங்கல்பட்டில் வழக்கறிஞர்கள் போராட்டம் நடத்தி, தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும் என்றும், டெல்லி காவல்துறையின் நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்தும் முழக்கங்களை எழுப்பினர்.
செங்கல்பட்டு நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர் சங்கத் தலைவர் சங்கர் தலைமையில் ஏராளமான வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தியும், டெல்லி காவல்துறையைக் கண்டித்தும் முழக்கங்களை எழுப்பினர்.
வாக்காளர் பட்டியலில் மேற்கொள்ளப்படும் சிறப்பு தீவிர திருத்தம் (SIR) தொடர்பாக நாடு முழுவதும் எதிர்ப்புப் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, தலைநகர் டெல்லியில் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில், டெல்லியில் மத்திய அரசுக்கு எதிராகவும், தலைமைத் தேர்தல் ஆணையருக்கு எதிராகவும் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது டெல்லி காவல்துறையினர் தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படும் சம்பவத்துக்கு வழக்கறிஞர்கள் கண்டனம் தெரிவித்தனர். மேலும், வாக்காளர் பட்டியலின் சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்தும், நீதிக்காகப் போராடுபவர்களைத் தடுக்கக் கூடாது என வலியுறுத்தியும் முழக்கங்களை எழுப்பினர்.
தலைமைத் தேர்தல் ஆணையர் பதவி விலக வேண்டும், மாணவர்கள் மீதான காவல்துறையின் நடவடிக்கைக்கு உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தால் செங்கல்பட்டு நீதிமன்ற வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
#செங்கல்பட்டில்_வழக்கறிஞர்கள்_போராட்டம் #செங்கல்பட்டு #வழக்கறிஞர்கள் #ஞானேஷ்குமார் #தலைமைத்தேர்தல்ஆணையர் #டெல்லிகாவல்துறை #SIR #வாக்காளர்பட்டியல் #சிறப்புதீவிரதிருத்தம் #வழக்கறிஞர்கள்ஆர்ப்பாட்டம் #மாணவர்கள்போராட்டம் #தேர்தல்ஆணையம் #நீதிக்கானபோராட்டம் #GyaneshKumar #Chengalpattu #LawyersProtest #ChiefElectionCommissioner #DelhiPolice #SIR #VoterListRevision #ElectionCommission #LawyersAgitation #StudentProtest #PoliticalProtest #TamilNaduNews #ChengalpattuNews #ElectionNews #ProtestNews #LegalCommunity #BreakingNews













