Advertisement

கூடுவாஞ்சேரி கொலை வழக்கு: பிரியாணி தயாரித்த தம்பதி மீது குண்டாஸ்

கூடுவாஞ்சேரி கொலை வழக்கு: பெண்ணைக் கொலை செய்து உடலைத் துண்டு துண்டாக வெட்டி, ஒரு பகுதியைப் பிரியாணி தயாரிக்கும் பாத்திரத்தில் வைத்துச் சென்றதாகக் குற்றம்சாட்டப்பட்ட கணவன், மனைவி இருவர் மீதும் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி மசூதி தெருவில் வசித்து வந்த பெண் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த ஹயாத்துன் நிஷா (38) என்பவரைக் கொலை செய்து, அவரது உடலைத் துண்டு துண்டாக வெட்டியதாகக் கூறப்படுகிறது. அதில் ஒரு பகுதியைப் பிரியாணி தயாரிக்கும் பெரிய பாத்திரத்தில் வைத்துச் சென்றுவிட்டு, தலையைத் தவிர மீதமுள்ள உடல் பாகங்களை ஒரு சூட்கேஸில் வைத்து ரயிலில் எடுத்துச் சென்றதாகக் குற்றச்சாட்டு எழுந்தது.

Advertisement

கடந்த ஆகஸ்ட் 5-ம் தேதி சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து ஆக்ரா நோக்கிப் புறப்பட்ட தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயிலில் அந்த சூட்கேஸ் வைக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. பின்னர் ஆக்ரா ரயில் நிலையத்தில் கேட்பாரற்றுக் கிடந்த சூட்கேஸைத் திறந்து பார்த்தபோது, அதில் தலை இல்லாத மனித உடல் எலும்புக்கூடும், சில உடல் உறுப்புகளும் இருந்தது தெரியவந்தது.

இதையடுத்து ஆக்ரா போலீசார் விசாரணை நடத்தி, இந்த வழக்கை தமிழக காவல்துறைக்கு மாற்றினர். அதன் அடிப்படையில் தமிழக போலீசார் பல்வேறு இடங்களில் இருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து விசாரணையைத் தீவிரப்படுத்தினர்.

Advertisement

அப்போது கூடுவாஞ்சேரி மசூதி தெருவில் உள்ள ஒரு வீட்டில் போலீசார் சோதனை நடத்தியபோது, அங்கிருந்த பிரியாணி தயாரிக்கும் பெரிய பாத்திரத்தில் மனித சதைப் பகுதிகள் இருந்தது தெரியவந்ததாகக் கூறப்படுகிறது.

தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், இந்தக் கொலை தொடர்பாக அசாம் மாநிலத்தைச் சேர்ந்த மணிக் உத்தீன் லஸ்கர் (22) மற்றும் அவரது மனைவி பகவதி மாஜி ஆகியோரை கூடுவாஞ்சேரி போலீசார் கைது செய்தனர். பின்னர் இருவரும் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்த நிலையில், கைது செய்யப்பட்ட இருவர் மீதும் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க தாம்பரம் மாநகர காவல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார். இதற்கான உத்தரவு நகல்களை கூடுவாஞ்சேரி காவல் ஆய்வாளர் கோவிந்தராஜ் புழல் சிறை அதிகாரிகளிடம் வழங்கினார்.

#கூடுவாஞ்சேரிகொலைவழக்கு #கூடுவாஞ்சேரி #குண்டர்சட்டம் #குண்டர்தடுப்புச்சட்டம் #கொலைவழக்கு #ஹயாத்துன்நிஷா #மணிக்உத்தீன்லஸ்கர் #பகவதிமாஜி #தாம்பரம்காவல்துறை #கூடுவாஞ்சேரிபோலீஸ் #புழல்சிறை #செங்கல்பட்டு #சென்னைசென்ட்ரல் #தமிழ்நாடுஎக்ஸ்பிரஸ் #ஆக்ரா #குற்றவியல் #காவல்துறைவிசாரணை #Guduvanchery #GuduvancheryMurderCase #GoondasAct #PreventiveDetention #MurderCase #HayathunNisha #ManikUddinLaskar #BhagawatiMajhi #TambaramPolice #GuduvancheryPolice #PuzhalPrison #Chengalpattu #ChennaiCentral #TamilNaduExpress #Agra #CrimeNews #TamilNaduPolice #BreakingNews

What is your reaction?

இதே போன்ற செய்திகள்

Advertisement