Advertisement

வாட்ஸ்அப்பில் அரசு சான்றிதழ்கள்: ஒரு ‘Hi’ போதும்

டிஜிட்டல் சேவைகளை விரிவுபடுத்தும் நோக்கில், அரசு தற்போது வாட்ஸ்அப் மூலம் பொதுமக்களுக்கு பல்வேறு சான்றிதழ்கள் மற்றும் சேவைகளை வழங்கும் புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த சேவையின் மூலம், மக்கள் அரசு அலுவலகங்களுக்கு நேரில் செல்லாமல், வீட்டிலிருந்தே தேவையான ஆவணங்களைப் பெற முடியும்.

இந்த வசதியின் கீழ், பிறப்பு சான்றிதழ், இறப்பு சான்றிதழ், வீட்டு வரி விவரங்கள், குடிநீர் வரி உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட அரசு சேவைகள் கிடைக்கின்றன. இந்த சேவையை பயன்படுத்த, 7845252525 என்ற வாட்ஸ்அப் எண்ணை மொபைலில் சேமித்து ‘Hi’ என்று ஒரு மெசேஜ் அனுப்பினாலே போதும். பின்னர், வழிகாட்டுதல்களின் அடிப்படையில் தேவையான சேவையை தேர்வு செய்து பயன்படுத்தலாம்.

Advertisement

இந்த புதிய முயற்சி, நேரமும் செலவும் மிச்சப்படுத்துவதோடு, மக்கள் சேவைகளை எளிதாகப் பெற உதவுகிறது. குறிப்பாக முதியோர் மற்றும் அலுவலகங்களுக்கு செல்ல முடியாதவர்களுக்கு இது பெரும் உதவியாக இருக்கும்.

எனினும், பாதுகாப்பு காரணங்களுக்காக அதிகாரப்பூர்வ எண்ணை மட்டுமே பயன்படுத்த வேண்டும். தனிப்பட்ட தகவல்களை பகிரும் போது கவனமாக இருக்க வேண்டும் என அதிகாரிகள் அறிவுறுத்துகின்றனர்.

Advertisement

What is your reaction?

இதே போன்ற செய்திகள்

Advertisement