Advertisement

மீண்டும் டாஸ்மாக் கடை திறப்பு! – பழவேலியில் பெண்கள் போராட்டம்

மீண்டும் டாஸ்மாக் கடை திறப்பு காரணமாக, செங்கல்பட்டு அருகே பழவேலி பகுதியில் பெண்கள் மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கடையை மூட நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதியளித்தும் மீண்டும் கடை திறக்கப்பட்டதால் பொதுமக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

செங்கல்பட்டு நகரில் குடியிருப்புப் பகுதிக்கு அருகே இயங்கி வந்த அரசு மதுபானக் கடைக்கு எதிராக அப்பகுதி மக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, அந்தக் கடை செங்கல்பட்டு நகரில் இருந்து அகற்றப்பட்டு, செங்கல்பட்டு அருகே உள்ள பழவேலி ஊராட்சியில் புதிதாக அமைக்கப்பட்டது.

Advertisement

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த சனிக்கிழமை, பழவேலி பகுதியில் பெண்கள், குழந்தைகள் உட்பட 100-க்கும் மேற்பட்டோர் புதிதாகத் திறக்கப்பட்ட மதுபானக் கடையின் முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது, செங்கல்பட்டு கோட்டாட்சியர் பாலாஜி போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். மதுபானக் கடையை மூட நடவடிக்கை எடுப்பதாக அவர் உறுதியளித்ததைத் தொடர்ந்து, போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.

Advertisement

இந்த நிலையில், இன்று மீண்டும் மதுபானக் கடை திறக்கப்பட்டதால் பழவேலி பகுதியைச் சேர்ந்த பெண்கள் மீண்டும் போராட்டத்தில் குதித்துள்ளனர். கடையை நிரந்தரமாக அகற்ற வேண்டும் என அவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

புதிதாக அமைக்கப்பட்டுள்ள மதுபானக் கடையால் அப்பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் மற்றும் முதியவர்கள் மதுப் பழக்கத்திற்கு ஆளாகும் அபாயம் இருப்பதாகப் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும், திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலைக்கு அருகே மதுபானக் கடை அமைந்துள்ளதால், மது அருந்திவிட்டு சாலையைக் கடப்பவர்களால் விபத்துகளும் உயிரிழப்புகளும் ஏற்படக்கூடும் என அவர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

பழவேலி கிராம மக்களின் நலன் மற்றும் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, புதிதாக அமைக்கப்பட்டுள்ள அரசு மதுபானக் கடையை அங்கிருந்து அகற்ற வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதற்கிடையே, போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பொதுமக்களிடம் செங்கல்பட்டு தாலுகா காவல் ஆய்வாளர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் செங்கல்பட்டு கோட்ட துணைக் காவல் கண்காணிப்பாளர் வீரக்குமார் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

மதுபானக் கடையை மூடுவதாக அளிக்கப்பட்ட உறுதிக்குப் பிறகும் மீண்டும் கடை திறக்கப்பட்டதால் பழவேலி பகுதியில் தொடர்ந்து பதற்றமான சூழல் நிலவி வருகிறது.

#மீண்டும்டாஸ்மாக்கடைதிறப்பு #பழவேலி #டாஸ்மாக் #பெண்கள்போராட்டம் #செங்கல்பட்டு #மதுபானக்கடை #கடையைமூடக்கோரி #பொதுமக்கள்போராட்டம் #கோட்டாட்சியர்பேச்சுவார்த்தை #திருச்சிசென்னைதேசியநெடுஞ்சாலை #மக்கள்எதிர்ப்பு #பொதுமக்கள்பாதுகாப்பு #பழவேலிசெய்தி #TASMAC #Pazhaveli #TASMACShop #WomenProtest #Chengalpattu #LiquorShopProtest #ShopClosureDemand #PublicProtest #RevenueDivisionalOfficer #ChennaiTrichyHighway #PublicSafety #LocalNews #TamilNaduNews #TamilNews #LiquorShopControversy

What is your reaction?

இதே போன்ற செய்திகள்

Advertisement