Advertisement

முன்னிலை வேகத்தில் TVK: அடுத்த கட்டம் குறித்து விஜய் அவசர ஆலோசனை

2026 தமிழக சட்டமன்றத் தேர்தலின் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணி முதல் மாநிலம் முழுவதும் நடைபெற்று வருகிறது. மொத்தம் 234 தொகுதிகளுக்கான இந்தத் தேர்தலில் கடந்த ஏப்ரல் 23-ஆம் தேதி 85.10 சதவீதம் வாக்குகள் பதிவாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.

வாக்கு எண்ணிக்கை தொடங்கிய முதலே தமிழக வெற்றிக் கழகம் (TVK) பல தொகுதிகளில் வலுவான முன்னிலை பெற்று அரசியல் வட்டாரங்களில் கவனம் ஈர்த்துள்ளது. குறிப்பாக, 100-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் தொடர்ந்து முன்னிலை வகிப்பது கட்சிக்கு சாதகமான நிலையை உருவாக்கியுள்ளது.

Advertisement

இந்த நிலையில், கட்சித் தலைவர் விஜய் போட்டியிட்ட இரு தொகுதிகளிலும் முன்னிலையில் இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. பிற்பகலுக்குப் பிறகு ஒவ்வொரு தொகுதியின் இறுதி முடிவுகளும் தெளிவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழகத்தில் ஆட்சியை அமைக்க குறைந்தபட்சம் 118 இடங்கள் தேவைப்படுகிறது. இந்த எண்ணிக்கையை TVK எட்டுமா அல்லது கூட்டணி தேவையா என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில், அடுத்த கட்ட அரசியல் நடவடிக்கைகள் குறித்து விஜய் அவசர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.

Advertisement

இந்த முக்கிய ஆலோசனையில் தேர்தல் வியூக நிபுணர் ஜான் ஆரோக்கியசாமி உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றுள்ளதாக கூறப்படுகிறது. தேர்தல் முடிவுகள் இறுதி கட்டத்தை எட்டும் நேரத்தில், இந்த ஆலோசனை அரசியல் திசையை தீர்மானிக்கும் முக்கிய அம்சமாக பார்க்கப்படுகிறது.

What is your reaction?

இதே போன்ற செய்திகள்

Advertisement