Advertisement

கொட்டும் மழையிலும் பக்தர்கள் வெள்ளம்! – புதுப்பாக்கம் அகத்தீஸ்வரர் கோயிலில் மகா கும்பாபிஷேகம்

மகா கும்பாபிஷேகம் செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் அடுத்த புதுப்பாக்கத்தில் உள்ள அருள்மிகு அகிலாண்டேஸ்வரி உடனுறை ஸ்ரீ அகத்தீஸ்வரர் திருக்கோயிலில் வெகு விமரிசையாக நடைபெற்றது. கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்று, கும்பாபிஷேகத்தைக் கண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

புதுப்பாக்கம் ஊராட்சியில் அமைந்துள்ள இந்தப் பழமையான திருக்கோயில் சுமார் 2,500 ஆண்டுகள் பழமையானது எனக் கூறப்படுகிறது. இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இக்கோயிலில் கடந்த 2007-ஆம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது.

Advertisement

ஆகம விதிகளின்படி கோயில்களில் குறிப்பிட்ட கால இடைவெளியில் கும்பாபிஷேகம் நடத்தப்படுவது மரபாக உள்ளது. இதையடுத்து, அகிலாண்டேஸ்வரி உடனுறை அகத்தீஸ்வரர் கோயிலில் புனரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. மேலும், 63 நாயன்மார்கள், 18 சித்தர்கள், சரபேஸ்வரர், சுவாமி ஐயப்பன், பஞ்சமுக ஆஞ்சநேயர், காலபைரவர், துர்க்கை அம்மன் உள்ளிட்ட தெய்வங்களின் சன்னதிகளும் அமைக்கப்பட்டு திருப்பணிகள் நிறைவு செய்யப்பட்டன.

கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கடந்த வியாழக்கிழமை கணபதி ஹோமத்துடன் யாகசாலை பூஜைகள் தொடங்கின. தொடர்ந்து முதல் காலம், இரண்டாம் காலம், மூன்றாம் காலம் மற்றும் நான்காம் கால யாக பூஜைகள் நடைபெற்றன.

Advertisement

இதன் தொடர்ச்சியாக இன்று காலை ஐந்தாம் கால யாக பூஜை நடைபெற்றது. யாகசாலையில் வைத்து பூஜிக்கப்பட்ட புனித நீர் அடங்கிய கலசங்களை சிவாச்சாரியார்கள் மங்கள வாத்தியங்கள் மற்றும் செண்டை மேளங்கள் முழங்க எடுத்துச் சென்றனர்.

பின்னர் கோயில் கோபுர விமானங்களுக்கும், மூலவர் அருள்மிகு அகிலாண்டேஸ்வரி உடனுறை ஸ்ரீ அகத்தீஸ்வரருக்கும் புனித நீர் ஊற்றப்பட்டு அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது.

கொட்டும் மழையிலும் புதுப்பாக்கம், தாழம்பூர், நாவலூர், மாம்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் திரண்டு கும்பாபிஷேகத்தில் பங்கேற்றனர். பின்னர் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

விழாவில் பங்கேற்ற பக்தர்களுக்குத் திருக்கோயில் சார்பில் அறுசுவை உணவுடன் அன்னதானமும் வழங்கப்பட்டது. மழையையும் பொருட்படுத்தாமல் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றதால் புதுப்பாக்கம் பகுதியில் விழாக்கோலம் நிலவியது.

#மகாகும்பாபிஷேகம் #புதுப்பாக்கம் #அகத்தீஸ்வரர்கோயில் #அகிலாண்டேஸ்வரி #திருப்போரூர் #கும்பாபிஷேகவிழா #அஷ்டபந்தனகும்பாபிஷேகம் #கொட்டும்மழை #பக்தர்கள்வெள்ளம் #சுவாமிதரிசனம் #இந்துசமயஅறநிலையத்துறை #அன்னதானம் #தாழம்பூர் #நாவலூர் #மாம்பாக்கம் #MahaKumbabishekam #Pudupakkam #AgatheeswararTemple #Akilandeswari #Thiruporur #AshtabandhanaKumbabishekam #TempleFestival #HeavyRain #Devotees #TempleConsecration #Annadhanam #HinduReligiousTemple #Chengalpattu #TamilNaduTemples #TamilNews

What is your reaction?

இதே போன்ற செய்திகள்

Advertisement