Advertisement

ரேஷன் கடைகளில் வெற்றி இருவித செறிவூட்டப்பட்ட உப்பு: அமைச்சர் கீர்த்தனா அறிவிப்பு!

தமிழ்நாடு உப்பு நிறுவனத்தின் ‘வெற்றி இருவித செறிவூட்டப்பட்ட உப்பு’ ரேஷன் கடைகள் மற்றும் வெளிச்சந்தைகளில் விற்பனை செய்யப்படும் என அமைச்சர் கீர்த்தனா தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் பொதுமக்களின் ஊட்டச்சத்துப் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், தமிழ்நாடு உப்பு நிறுவனத்தால் (T salt) பிரத்யேகமாகத் தயாரிக்கப்படும் இருவித செறிவூட்டப்பட்ட உப்பு ‘வெற்றி இருவித செறிவூட்டப்பட்ட உப்பு’ என்ற புதிய வணிகப் பெயரில் ரேஷன் கடைகளிலும், வெளிச்சந்தைகளிலும் விற்பனைக்குக் கொண்டுவரப்படும் என்று அமைச்சர் கீர்த்தனா அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

Advertisement

பொதுமக்கள் மற்றும் வளரிளம் பெண்களிடையே காணப்படும் இரும்புச்சத்து மற்றும் அயோடின் குறைபாடுகளைக் களையும் நோக்கில், தமிழ்நாடு அரசு பல்வேறு ஆக்கப்பூர்வ நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக, தமிழ்நாடு உப்பு நிறுவனம் தயாரிக்கும் உயர்தரமான செறிவூட்டப்பட்ட உப்பை அனைத்துத் தரப்பு மக்களுக்கும் எளிய முறையில் தட்டுப்பாடின்றி கொண்டு சேர்க்கும் சிறப்புத் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அமைச்சர் வெளியிட்டுள்ள தகவலில், “பொதுமக்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் நோக்கில் தயாரிக்கப்படும் இந்த ‘வெற்றி இருவித செறிவூட்டப்பட்ட உப்பு’, நியாயவிலைக் கடைகள் (ரேஷன் கடைகள்) மட்டுமின்றி, பொதுச் சந்தை மற்றும் தனியார் சிறப்பங்காடிகள் மூலமாகவும் பொதுமக்கள் எளிதில் வாங்கும் வகையில் குறைந்த விலையில் விற்பனை செய்யப்படும். இதன் மூலம் அடித்தட்டு மக்களின் அத்தியாவசிய ஊட்டச்சத்துத் தேவைகள் தடையின்றிப் பூர்த்தி செய்யப்படும்” என்று தெரிவித்துள்ளார்.

Advertisement

அரசு நிறுவனத்தின் இந்தத் தரமான தயாரிப்பு பொது விநியோகத் திட்டம் மற்றும் வெளிச்சந்தை வாயிலாகக் குறைந்த விலையில் கிடைக்கவுள்ளது பொதுமக்களிடையே, குறிப்பாகக் குடும்பப் பெண்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

 

 

 

What is your reaction?

இதே போன்ற செய்திகள்

Advertisement