Advertisement
,

தவெக-வின் வரவு அதிமுக-விற்கு பின்னடைவு?

தமிழக சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவிற்கு இன்னும் சில நாட்களே (ஏப்ரல் 23) உள்ள நிலையில், பல்வேறு முன்னணி செய்தி நிறுவனங்கள் மற்றும் ஆய்வு அமைப்புகள் வெளியிட்டுள்ள கருத்துக்கணிப்பு முடிவுகள் தமிழக அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

பெரும்பாலான கணிப்புகள் ஆளுங்கட்சியான திமுக மீண்டும் ஆட்சியைத் தக்கவைக்கும் என்றே ஒருமித்த கருத்தைத் தெரிவிக்கின்றன. 2026 தேர்தல் களத்தில் நிலவும் 5 முனைப் போட்டியும் அவைகளுக்கான வெற்றி வாய்ப்பு குறித்து வெளியிடப்பட்டுள்ள கருத்துக்கணிப்புகளின் முடிவுகளை சற்றே பார்ப்போம்.

Advertisement

ஏபிபி சர்வே (ABP News) வெளியிட்டுள்ள முடிவுகளின் படி திமுக கூட்டணி 172 – 179 இடங்களை கைப்பற்றும் என்றும் அதிமுக 50 தொகுதிகள் வரை கைப்பற்றும் என்றும் தவெக, நாம் தமிழர் கட்சிகளுக்கு எந்த இடமும் கிடைக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
INSIDE ELECTION வெளியிட்டுள்ள முடிவுகளின் படி திமுக கூட்டணி 159 – 165 இடங்களை கைப்பற்றும் என்றும் அதிமுக 64-70 தொகுதிகள் வரை கைப்பற்றும் என்றும் தவெக, நாம் தமிழர் கட்சிகளுக்கு எந்த இடமும் கிடைக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

லோக் போல் (Lok Poll), போல் டிராக்கர் (Poll Tracker) மற்றும் அக்னி நியூஸ் நிறுவனங்களும் திமுகவிற்கு 181 – 189 இடங்களும் மற்ற கட்சிகள் பெரும் பின்னடைவை சந்திக்கும் என்றும் திட்டவட்டமாக தங்களுடைய கருத்துக்ணிப்பை வெளியிட்டுள்ளன
நக்கீரன் இதழ் வெளியிட்டுள்ள முதற்கட்ட கணிப்பில், மொத்தம் உள்ள 119 தொகுதிகளில் 90-க்கும் மேற்பட்ட இடங்களில் திமுக முன்னிலையில் உள்ளது.

Advertisement

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் சுமார் 6% முதல் 21% வரை வாக்குகளைப் பெறும் எனத் கணிக்கப்பட்டுள்ளது. இது பல தொகுதிகளில் இரண்டாம் இடத்திற்கான போட்டியில் அதிமுக-விற்குப் பெரும் சவாலாக மாறியுள்ளது. சென்னை, காஞ்சிபுரம், திருச்சி ஆகிய மாவட்டங்களில் திமுகவின் ஆதிக்கம் தொடரும் வேளையில், சேலத்தில் மட்டுமே அதிமுக தனது செல்வாக்கைத் தக்கவைக்கும் எனத் தெரிகிறது.’

சுமார் 1.63 லட்சம் வாக்காளர்களிடம் நடத்தப்பட்ட இந்த ஆய்வின்படி, திமுக 44% வாக்குகளுடன் அசுர பலத்தைப் பெற்றுள்ளது. அதிமுக-வின் கோட்டை எனக் கருதப்படும் கொங்கு மற்றும் வடக்கு மண்டலங்களில்கூட திமுக முந்துவது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

தவெக ஈர்க்கும் 18% வாக்குகள் பெரும்பாலும் அதிமுக-வின் வாக்கு வங்கியில் இருந்தே பிரியும் என்பதால், அது எடப்பாடி பழனிசாமி தரப்பிற்குப் பெரும் பின்னடைவாக அமையும் என இந்த ஆய்வு எச்சரிக்கிறது.

அக்னி நியூஸ் சர்வீஸ் (ANS) கணிப்பின்படி, சென்னை மண்டலத்தில் 37 இடங்களில் 36-ஐ திமுக கைப்பற்றும். மத்திய மண்டலத்திலும் திமுகவின் ஆதிக்கம் 90%-க்கும் அதிகமாக இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில், சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சிக்கு இந்த முறையும் சட்டமன்றத்தில் இடங்கள் கிடைக்க வாய்ப்பில்லை (0 இடங்கள்) என அனைத்துக் கணிப்புகளும் ஒருமித்துக் கூறுகின்றன.

திமுக தனித்து 140 இடங்களுக்கு மேல் வெல்ல வாய்ப்புள்ளதால், ‘ஆட்சியில் பங்கு’ என்ற பேச்சுக்கே இடமில்லாமல் திமுக தனது பலத்தை நிரூபிக்கும். இது எதிர்க்கட்சிகளுக்கு ஒரு மிகப்பெரிய சவாலான காலக்கட்டம் என்று அரசியல் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்

What is your reaction?

இதே போன்ற செய்திகள்

Advertisement