Advertisement

தாம்பரம் அருகே 10 அடி மலைப்பாம்பு மீட்பு; குடியிருப்புப் பகுதியில் பரபரப்பு

தாம்பரம் அருகே புதுபெருங்களத்தூர் சதானந்தபுரம் பகுதியில் உள்ள சுவாமிகள் மடத்திற்குள் 10 அடி நீளமுடைய மலைப்பாம்பு நுழைந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இன்று இரவு மட வளாகத்திற்குள் திடீரென மலைப்பாம்பு ஒன்று ஊர்ந்து வருவதை கண்ட பொதுமக்கள் மற்றும் மட நிர்வாகத்தினர் அதிர்ச்சியடைந்து உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர்.

Advertisement

தகவலின் பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்த வனத்துறையினர், சுமார் 10 அடி நீளமுடைய மலைப்பாம்பை பாதுகாப்பாக மீட்டு எடுத்துச் சென்றனர்.

அடர்த்தியான குடியிருப்புகள் நிறைந்த பகுதியில் இவ்வளவு பெரிய மலைப்பாம்பு கண்டுபிடிக்கப்பட்டது அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும், மலைப்பாம்பு இயற்கையாக அப்பகுதிக்கு வந்ததா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது குறித்து வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

What is your reaction?

இதே போன்ற செய்திகள்

Advertisement