Advertisement

South Indian வங்கியில் Junior Officer வேலைவாய்ப்பு.. மே 13 கடைசி தேதி

South Indian Bank நிறுவனம் Junior Officer (Operations) பணிக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. வங்கி துறையில் பணிபுரிய விரும்பும் இளைஞர்களுக்கு இது ஒரு சிறந்த வாய்ப்பாக பார்க்கப்படுகிறது.

இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் ஏதேனும் ஒரு துறையில் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். மேலும், வங்கி அல்லது NBFC துறையில் குறைந்தது ஒரு ஆண்டு பணியனுபவம் பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

தேர்வு செய்யப்படும் பணியாளர்களுக்கு ஆண்டு சம்பளமாக ரூ.4.86 லட்சம் முதல் ரூ.5.04 லட்சம் வரை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பணியிடம் மற்றும் பிற விவரங்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் இடம்பெற்றுள்ளன.

ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்கள் www.southindianbank.bank.in அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்கும் கடைசி தேதி மே 13 என அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

வேலைவாய்ப்பு தொடர்பான முழுமையான தகவல்கள், கல்வித் தகுதி, வயது வரம்பு மற்றும் விண்ணப்பிக்கும் நடைமுறைகள் குறித்து அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

What is your reaction?

இதே போன்ற செய்திகள்

Advertisement