ரேஷன் அட்டைதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு; ஜூன் 25க்குள் கைவிரல் ரேகை பதிவு அவசியம்

0
2

செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

அதில், குடும்ப அட்டையில் இடம்பெற்றுள்ள உறுப்பினர்களின் கைவிரல் ரேகை (பயோமெட்ரிக்) பதிவை வரும் ஜூன் 25ஆம் தேதிக்குள் கட்டாயம் பதிவு செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரேஷன் பொருட்கள் வழங்கும் பணியில் முறைகேடுகள் மற்றும் தவறான பயன்பாடுகளை தடுக்க இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

குறிப்பாக, செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த குடும்ப அட்டைதாரர்கள் தற்போது பிற மாவட்டங்கள் அல்லது பிற பகுதிகளில் தற்காலிகமாக வசித்து வந்தாலும், அவர்கள் தங்களது கைவிரல் ரேகை பதிவை குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பயோமெட்ரிக் பதிவு மூலம் குடும்ப அட்டை விவரங்கள் துல்லியமாக பராமரிக்கப்படுவதுடன், தகுதியான பயனாளிகளுக்கு மட்டுமே ரேஷன் பொருட்கள் வழங்கப்படுவதை உறுதி செய்ய முடியும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

எனவே, குடும்ப அட்டை உறுப்பினர்கள் அனைவரும் அருகிலுள்ள நியாயவிலைக் கடை அல்லது சம்பந்தப்பட்ட அதிகாரிகளை அணுகி, ஜூன் 25ஆம் தேதிக்குள் கைவிரல் ரேகை பதிவை மேற்கொள்ளுமாறு மாவட்ட நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.