Advertisement

“ஐஸ்கிரீம் வாங்கித் தருவதாகக் கூறி கொடூரம்” – 11 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபர் போக்சோவில் கைது!

செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி அருகே வீட்டின் வாசலில் விளையாடிக் கொண்டிருந்த 11 வயது பள்ளி மாணவிக்கு ஐஸ்கிரீம் வாங்கித் தருவதாகக் கூறி பாலியல் தொல்லை அளித்த 43 வயது நபரைப் போக்சோ (POCSO) சட்டத்தின் கீழ் காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

கூடுவாஞ்சேரி காவல் எல்லைக்குட்பட்ட பகுதியைச் சேர்ந்த 11 வயது சிறுமி ஒருவர், தனது வீட்டின் வாசலில் விளையாடிக் கொண்டிருந்தபோது, அதே பகுதியைச் சேர்ந்த மகாதேவன் (43) என்பவர் சிறுமிக்கு ஆசை வார்த்தைகள் கூறி, ஐஸ்கிரீம் வாங்கித் தருவதாக அழைத்துச் சென்று பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். இச்சம்பவம் குறித்துச் சிறுமி தன் பெற்றோரிடம் தெரிவிக்கவே, அதிர்ச்சியடைந்த பெற்றோர் உடனடியாக கிளாம்பாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

Advertisement

பெற்றோர் அளித்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த கிளாம்பாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையப் துறையினர், குற்றம் சாட்டப்பட்ட மகாதேவனைப் பிடித்துத் தீவிர விசாரணை மேற்கொண்டனர். காவல் துறையினரின் முதற்கட்ட விசாரணையில் மகாதேவன் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது உண்மை என உறுதி செய்யப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, மகாதேவன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்த காவல் துறையினர், அவரைச் செங்கல்பட்டு போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திச் சிறையில் அடைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

கூடுவாஞ்சேரி போக்சோ கைது, கிளாம்பாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையம், சிறுமிக்கு பாலியல் தொல்லை மகாதேவன் கைது, செங்கல்பட்டு குற்றச் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், Guduvanchery POCSO Arrest, Kilambakkam All Women Police Station, 11 Year Old Girl Molested Dubai, Chengalpattu Crime News, TN Crime News Tamil.

 

 

 

 

What is your reaction?

இதே போன்ற செய்திகள்

Advertisement