Advertisement

செங்கல்பட்டு; வயல்வெளியில் ஆண் சடலம்: பரபரப்பு

வளர்குன்றம் அருகே வயல்வெளியில் மர்மமான முறையில் டைல்ஸ் தொழிலாளி ஒருவர் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவரது இருசக்கர வாகனம் மாயமான நிலையில், கொலை செய்யப்பட்டாரா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

🚨 வயல்வெளியில் ஆண் சடலம்

செங்கல்பட்டு அடுத்த வளர்குன்றம் கிராம எல்லையில் உள்ள வயல்வெளியில் ஆண் சடலம் கிடப்பதாக செங்கல்பட்டு தாலுகா போலீசாருக்கு தகவல் கிடைத்தது. சடலம் கிடந்த பகுதி திருக்கழுக்குன்றம், மானாமதி மற்றும் செங்கல்பட்டு தாலுகா காவல் நிலையங்களின் எல்லைப்பகுதியாக இருந்ததால், எந்த காவல் நிலையம் விசாரணை மேற்கொள்வது என்பதில் முதற்கட்ட குழப்பம் ஏற்பட்டது. பின்னர், அந்த இடம் வளர்குன்றம் கிராமத்திற்குட்பட்ட மேய்க்கால் புறம்போக்கு பகுதி என வருவாய்த்துறை அதிகாரிகள் தெரிவித்ததைத் தொடர்ந்து, செங்கல்பட்டு தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று சடலத்தை மீட்டனர்.

Advertisement

🕵️ உயிரிழந்தவர் யார்?

போலீசார் நடத்திய விசாரணையில், உயிரிழந்தவர் பெரிய இரும்பேடு கிராமத்தைச் சேர்ந்த மாரியப்பன் (35) என்பதும், டைல்ஸ் ஒட்டும் தொழிலில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது. அவர் தனது இருசக்கர வாகனத்தில் வளர்குன்றம் பகுதியில் உள்ள வயல்வெளிக்கு வந்து மது அருந்தியதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. பின்னர், அவர் மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில் கிடந்துள்ளார். அவரது உடல் மீட்கப்பட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.

🔎 இருசக்கர வாகனம் மாயம் – கொலை சந்தேகம்

மாரியப்பன் அருகே மதுபாட்டில்கள் கிடந்த நிலையில், அவர் வந்த இருசக்கர வாகனம் காணாமல் போயுள்ளது போலீசாரின் சந்தேகத்தை அதிகரித்துள்ளது. வாகனத்தை திருடுவதற்காக மர்ம நபர்கள் அவரை கொலை செய்தார்களா அல்லது வேறு காரணம் உள்ளதா என்ற கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதுதொடர்பாக சந்தேகத்தின் அடிப்படையில் முருகன் (35) என்பவரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். பிரேதப் பரிசோதனை அறிக்கை மற்றும் தொடர் விசாரணையின் அடிப்படையில் உயிரிழப்புக்கான காரணம் குறித்து தெளிவு கிடைக்கும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

What is your reaction?

இதே போன்ற செய்திகள்

Advertisement