Advertisement

கிளாம்பாக்கம்: போதையில் அரசுப் பேருந்து ஓட்டுநர் கொலை

கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் மதுபோதையில் அரசு பேருந்து ஓட்டுநர்கள் இடையே ஏற்பட்ட தகராறில், கீழே விழுந்து தலையில் காயமடைந்த ஓட்டுநர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுதொடர்பாக மற்றொரு ஓட்டுநரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

🚌 பணி முடிந்து தங்கும் அறையில் தகராறு

திருவண்ணாமலை மாவட்டம் மேலச்சேரி, அல்லிப்புத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் சிவசங்கர் (43). அரசு பேருந்து ஓட்டுநரான இவர், கிளாம்பாக்கம் – திருச்சி இடையே இயக்கப்படும் பேருந்தை ஓட்டி வந்தார். அதேபோல், திருவண்ணாமலை மாவட்டம் கிலியப்பட்டு பகுதியைச் சேர்ந்த உதயகாந்தி (50), கிளாம்பாக்கம் – திருவண்ணாமலை இடையே இயக்கப்படும் அரசு பேருந்தின் ஓட்டுநராக பணியாற்றி வந்தார். இருவரும் கடந்த 8-ம் தேதி பணி முடித்துவிட்டு, இரவில் மது அருந்திய நிலையில் கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் உள்ள ஓட்டுநர்களுக்கான தங்கும் அறைக்கு வந்ததாக கூறப்படுகிறது.

Advertisement

⚠️ வாக்குவாதம் முற்றி தாக்குதல்

இரவு சுமார் 9.45 மணியளவில் மதுபோதையில் இருந்த இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. பின்னர் வாக்குவாதம் தகராறாக மாறிய நிலையில், உதயகாந்தி சிவசங்கரை கீழே தள்ளி தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் சிவசங்கரின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து சக ஊழியர்கள் அவரை மீட்டு தாம்பரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக போரூரில் உள்ள ராமச்சந்திரா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.

🏥 சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு – ஓட்டுநர் கைது

தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த சிவசங்கர், கடந்த 16-ம் தேதி இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து கிளாம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதையடுத்து சம்பவத்தில் தொடர்புடையதாக கூறப்படும் அரசு பேருந்து ஓட்டுநர் உதயகாந்தியை நேற்று கைது செய்த போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். சம்பவம் தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

What is your reaction?

இதே போன்ற செய்திகள்

Advertisement