Advertisement

காதல் விவகாரத்தில் கொலை: திருமாவளவன் ரூ.1 லட்சம் நிவாரணம்

கேளம்பாக்கம் அருகே காதல் விவகாரத்தில் வெட்டிக் கொலை செய்யப்பட்ட வாலிபர் பிரவீன்குமார் குடும்பத்தினரை சந்தித்த வி.சி.க., தலைவர் திருமாவளவன் ஆறுதல் தெரிவித்து, கட்சி சார்பில் ரூ.1 லட்சம் நிவாரண உதவி வழங்கினார்.

💔 காதல் விவகாரத்தில் வாலிபர் படுகொலை

செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கம் அடுத்த தையூரைச் சேர்ந்தவர் பிரவீன்குமார், 23. இவர் அதே பகுதியைச் சேர்ந்த ஏழுமலை என்பவரின் மகளை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இதற்கு பெண்ணின் குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்நிலையில், கடந்த 16ம் தேதி பிரவீன்குமாரை சிலர் அரிவாளால் வெட்டியுள்ளனர். படுகாயமடைந்த அவர் சென்னை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

Advertisement

🚔 ஐந்து பேர் கைது

மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த பிரவீன்குமார், இரண்டு நாட்களுக்கு முன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து கேளம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். சம்பவம் தொடர்பாக பெண்ணின் தந்தை உட்பட ஐந்து பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் தையூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பரபரப்பை ஏற்படுத்தியது.

🤝 திருமாவளவன் ஆறுதல்; ரூ.1 லட்சம் நிவாரணம்

இந்நிலையில், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் நேற்று பிரவீன்குமாரின் வீட்டிற்கு நேரில் சென்று, அவரது குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். தொடர்ந்து, கட்சி சார்பில் பிரவீன்குமார் குடும்பத்தினருக்கு ரூ.1 லட்சம் நிவாரண உதவியை வழங்கினார். நிகழ்ச்சியில் மாவட்ட செயலர் கனல்விழி, மாவட்ட துணைச் செயலர் சமரன், திருப்போரூர் தெற்கு ஒன்றிய செயலர் வேதா அருள் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.

What is your reaction?

இதே போன்ற செய்திகள்

Advertisement