விஜய் நடித்த ஜனநாயகன் திரைப்படம் இணையத்தில் சட்டவிரோதமாக வெளியான விவகாரத்தில் முக்கிய குற்றவாளிகளை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
இயக்குநர் ஹெச். வினோத் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம் இணையத்தில் சட்டவிரோதமாக வெளியானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து, படத்தை பகிர்ந்தாலோ பதிவிறக்கம் செய்தாலோ கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தயாரிப்பு நிறுவனம் எச்சரிக்கை விடுத்தது.
இந்த விவகாரம் தொடர்பாக தமிழக சைபர் குற்றப்பிரிவு போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், எடிட்டிங் ஸ்டூடியோவிற்குள் நுழைந்த உதவி படத்தொகுப்பாளர் ஒருவர் படத்தை திருடி வெளியிட்டது தெரியவந்துள்ளது.
இதனையடுத்து, தலைமறைவாக இருந்த உதவி எடிட்டர் உட்பட மூன்று பேரை போலீசார் கைது செய்துள்ளனர். ஆனால், அவர்களது பெயர்களை போலீசார் வெளியிடவில்லை. இருப்பினும், 3 பேரிடமும் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் ஏற்கெனவே 6 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், தற்போது மேலும் 3 பேர் சிக்கியுள்ளனர். இந்த சம்பவம் திரையுலகில் பாதுகாப்பு குறைபாடு குறித்து கேள்விகளை எழுப்பியுள்ளது.
#Vijay #Jananayagan #MovieLeak #CyberCrime #Kollywood













