Advertisement

கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் ஓட்டுநர் திடீர் உயிரிழப்பு

கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையத்தில் பணியில் இருந்த அரசு விரைவு போக்குவரத்து கழக ஓட்டுநர் ஒருவர் திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அரசு விரைவு போக்குவரத்து கழகத்தில் ஓட்டுநராக பணியாற்றி வந்த ரஜினி (50), கும்பகோணத்தில் இருந்து கிளாம்பாக்கம் வந்த பேருந்தை ஓட்டி வந்திருந்தார். பயணத்தை முடித்த பின்னர் மீண்டும் அடுத்த பயணத்திற்காக தயாராகிக் கொண்டிருந்த நிலையில், திடீரென கடுமையான நெஞ்சுவலியால் அவதிப்பட்டார்.

Advertisement

இதையடுத்து அங்கிருந்த ஊழியர்கள் மற்றும் சக பணியாளர்கள் அவருக்கு உடனடியாக முதலுதவி அளித்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக தாம்பரம் அரசு மருத்துவமனைக்கு அவசரமாக அழைத்துச் செல்லப்பட்டார்.

ஆனால், மருத்துவமனையில் பரிசோதனை செய்த மருத்துவர்கள், ரஜினி ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். இந்த திடீர் சம்பவம் சக ஓட்டுநர்கள், நடத்துநர்கள் மற்றும் போக்குவரத்து கழக ஊழியர்கள் மத்தியில் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உயிரிழப்பிற்கான காரணம் குறித்து மருத்துவ அறிக்கை கிடைத்த பிறகே முழுமையான தகவல் தெரியவரும் என கூறப்படுகிறது.

What is your reaction?

இதே போன்ற செய்திகள்

Advertisement